Job Vacancy: நல்ல சம்பளத்துடன் மத்திய அரசு வேலை.! அதுவும் சென்னையில்.! எழுத்து தேர்வு, நேர்காணல் எப்போ தெரியுமா.?!

Published : Nov 20, 2025, 09:16 AM IST

CLRI நிறுவனத்தில்14 Project Associate பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப உள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் டிசம்பர் 22 மற்றும் 23, 2025 தேதிகளில் நடைபெறும் நேரடி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம். 

PREV
13
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை

CSIR – சென்ட்ரல் லெதர் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் (CLRI), சென்னை நிறுவனம்  14 Project Associate, Senior Project Associate மற்றும் Junior Research Fellow (JRF) பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசாங்க வேலைவாய்ப்பு பிரிவில் வெளியாகியுள்ள இந்த பணிகளுக்கு சென்னை நகரமே பணியிடமாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு உள்ளிட்ட விதிமுறைகளை கவனமாக படித்து, தகுதி உடையவர்கள் நேரடியாக நடைபெறும் தேர்வில் பங்கேற்க வேண்டும். இந்த அறிவிப்பின் படி எழுத்துத் தேர்வு 22.12.2025 (திங்கள்) நடைபெறவுள்ளதுடன், நேர்முகத் தேர்வு 23.12.2025 (செவ்வாய்) நடைபெறும். 

விண்ணப்பத்துடன் தேவையான கல்விச் சான்றுகள், அடையாள ஆவணங்கள் மற்றும் அனுபவச் சான்றுகளை இணைத்து, CSIR‐CLRI, சர்தார் பட்டேல் சாலை, அடையார், சென்னை – 600020 என்ற முகவரியில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

23
அட்டகாசமான வாய்ப்பு பட்டதாரிகளுக்கு

மொத்த 14 காலியிடங்களில் Project Associate-I பிரிவில் பல துறைகளில் பெரும்பாலான இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன; அதனுடன் Project Associate-II, Senior Project Associate மற்றும் JRF என தனித்தனி பணியிடங்களும் அடங்கும். Project Associate-I பதவிக்கு M.Sc., B.Tech., B.E., MCA, M.Tech., M.Pharm போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்; சில பதவிகளில் அனுபவம் மற்றும் ஆராய்ச்சி வெளியீடு விரும்பத்தக்க தகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

Project Associate-II பதவிக்கு Zoology அல்லது Biotechnology துறையில் இரண்டு ஆண்டு ஆராய்ச்சி அனுபவம் தேவை. Senior Project Associate பதவிக்கு M.V.Sc தகுதி கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 

Junior Research Fellow (JRF) பதவிக்கு M.Sc மற்றும் M.Tech - Biotechnology தகுதி வேண்டியது அவசியம்; அதிலும் GATE அல்லது NET தகுதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

33
வயது வரம்பு, சம்பளம் இதுதான்.!

வயது வரம்பு பதவி ஒன்றுக்கு ஒன்று மாறுபடுகிறது. Project Associate-I மற்றும் II பதவிகளுக்கு அதிகபட்ச வயது 35, Senior Project Associate பணிக்கு 40, JRF பணிக்கு 28 வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SC/ST விண்ணப்பதாரர்களுக்கு ஐந்து ஆண்டு தளர்வு, OBC விண்ணப்பதாரர்களுக்கு மூன்று ஆண்டு தளர்வு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு அரசின் விதிப்படி வயது சலுகை வழங்கப்படும். 

சம்பள விவரங்களில் Project Associate-I பதவிக்கு மாதம் ரூ.25,000 வரை HRA உடன் வழங்கப்படும்; சில பிரிவுகளில் ரூ.31,000 வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Project Associate-II பதவிக்கு ரூ.28,000, Senior Project Associate பணிக்கு ரூ.42,000, JRF பணிக்கு ரூ.37,000 ஊதியம் மற்றும் HRA வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் நபர்கள் செயல்படும் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சலை பராமரிக்க வேண்டும்; வேலைவாய்ப்பு தொடர்பான அடுத்த கட்ட அறிவிப்புகள் CLRI இணையதளத்தில் வெளியாகும் என்பதால் தொடர்ந்து பார்வையிட வேண்டும். அறிவிப்பு, தகுதி விவரங்கள், மற்றும் முதன்மை தகவல்கள் clri.org இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வேலைவாய்ப்பு வாய்ப்பு, ஆராய்ச்சி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப துறைகளில் தகுதி உள்ள இளைஞர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

Read more Photos on
click me!

Recommended Stories