PNB வங்கியில் வேலை! தமிழகத்தில் எத்தனை காலி பணியிடங்கள்! சம்பளம் எவ்வளவு?

Published : Feb 11, 2026, 09:54 AM IST

PNB Bank Job: பஞ்சாப் நேஷனல் வங்கி நாடு முழுவதும் 5,138 தொழிற்பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது, இதில் தமிழ்நாட்டில் 121 இடங்கள் உள்ளன.

PREV
15
பஞ்சாப் நேஷ்னல் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி பிஎன்பி என்றும் அழைக்கப்படுகிறது. இது டெல்லியை தலைமையிடமாக கொண்ட ஒரு இந்திய பொதுத்துறை வங்கியாகும். மொத்தம் 10,189 கிளைகளையும் 11,822 ஏடிஎம்களையும் கொண்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் தொழிற்பயிற்சி (அப்ரண்டிஸ்) பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 5,138 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 121 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தகுதி என்ன என்பதை பார்ப்போம்.

25
காலி பணியிடங்கள் எண்ணிக்கை

மொத்த காலி பணியிடங்கள் எண்ணிக்கை:

5,138, இதில் தமிழ்நாட்டில் மட்டும் 121 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் சென்னையில் 23, கோயம்புத்தூரில் 17, திருச்சியில் 16 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பிக்க தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 12 மாதங்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

35
மாதம் உதவித்தொகை

வயது மற்றும் தகுதிகள் என்ன?

20 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், ST/SC பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

மாதம் உதவித்தொகை

ஒரு ஆண்டு தொழிற்பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.15,000 உதவித்தொகையும், புறநகர் பகுதியில் இருப்பவர்களுக்கு மாதம் ரூ.12,300 வழங்கப்படும்.

45
விண்ணப்பிக்க கடைசி நாள்

விண்ணப்பிப்பது எப்படி?

இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://pnb.bank.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக பொது பிரிவினருக்கு ரூ.944, SC/ST பிரிவினர் ரூ.236 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

பிப்ரவரி 24

55
தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உள்ளூர் மொழி தேர்வு மற்றும் மருத்துவ தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு கொள்குறி வகையில் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் வினாத்தாள் அமையும். இப்பயிற்சிக்கு கல்வித்தகுதி, அடையாள சான்று உள்ளிட்டவற்றை அளித்து விண்ணப்பிக்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories