8ம் வகுப்பு பாஸ் பண்ணாலே போதும்! அரசு வேலை ரெடியா இருக்கு.! மாதம் ரூ.70,000 சம்பளம்!

Published : Feb 10, 2026, 09:53 AM IST

Government Job: தமிழக அரசு வழக்காடல் துறையில் காலியாக உள்ள 5 ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும் ரூ.70,000 சம்பளம்.

PREV
15
தமிழக அரசு வழக்காடல் துறை

அரசு பணியில் எப்படியாவது சேர்ந்து விட வேண்டும் என்பதால் தேர்வுக்கு இரவு பகல் பாராமல் போட்டி போட்டுக்கொண்டு லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பு அவ்வப்போது வெளியிடப்படும். அதன்படி தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தமிழக அரசு வழக்காடல் துறையில் காலியாக உள்ள 5 ஓட்டுநர் (Driver)பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வி தகுதி கண்டிப்பாக 8ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் மாத சம்பளம் என்ன என்பதை பார்ப்போம்.

25
ஓட்டுநர் காலி பணியிடங்கள்

தமிழக அரசின் வழக்காடல் துறையில் காலியாக 5 ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. சென்னை மற்றும் மதுரையில் ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 8ம் வகுப்பில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவத்துடன் கூடிய செல்லத்தக்க இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் (LMV Driving License) வைத்திருக்க வேண்டும்.

35
மாதம் சம்பளம்

குறைந்தது 5 ஆண்டுகள் ஓட்டுநராக பணியாற்றி இருக்க வேண்டும். ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. அதன்படி, BC/MBC பிரிவினருக்கு 18 வயது முதல் 34 வயதுக்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 18 வயது முதல் 37 வயதுக்குள் இருக்க வேண்டும். தமிழ்நாடு வழக்காடல் துறையில் ஓட்டுநர் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும்.

45
தேர்வு செய்யும் முறை?

தமிழ்நாடு வழக்காடல் துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும்.

55
விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு வழக்காடு துறையில் ஓட்டுநர் பணிக்கு தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். அரசு தலைமை வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம், சென்னை – 600104 (The Advocate General of Tamil Nadu, High Court, Chennai – 600104) என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் ரூ. 70 க்கான அஞ்சல் வில்லை (Postage Stamp) ஒட்டப்பட்டு முகவரிக்கு அனுப்ப வேண்டும். குறிப்பாக விண்ணப்ப படிவத்துடன் ஆதார் அட்டை நகல், சாதிச் சான்றிதழ், கல்வித்தகுதி சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் நகல் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கும் படிவத்தை பிப்ரவரி 16ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories