தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து வருகிறது. அந்தந்த பதவிகளை பொறுத்து குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல நிலைகளில் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் அரசு வேலையில் சேர்ந்து வருகின்றனர்.
கடைசி நேரத்தில் ரத்தான தேர்வு
இதற்கிடையே சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர் பதவிகள் அடங்கிய குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களை நிரப்ப முதல்நிலைத் தேர்வு நடந்து முடிந்து முடிவுகள் வெளியாகின.
முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு நேற்று (பிப்ரவரி 8) நடைபெற இருந்தது. ஆனால் சென்னையில் தேர்வு மையங்கள் அமைப்பதில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக தேர்வு கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.