ரயில்வே வேலை இனி ரொம்ப ஈஸி.. ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் இலவச பயிற்சி.. முழு விவரம் உள்ளே!

Published : Feb 10, 2026, 08:56 PM IST

ரயில்வே தேர்வு வாரியம் Group - D பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், இந்த வேலைக்கு இளைஞர்கள் தயாராகும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.

PREV
13
அரசு தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து வருகிறது. மாநிலம் முழுவதும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நம்பிக்கையுடன் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இது மட்டுமின்றி ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு தேர்வுகளுக்கும் ஏராளமானோர் நம்பிக்கையுடன் படித்து வருகின்றனர்.

ரயில்வே தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

பெரும்பாலானோர் மற்ற வேலைகளுக்கு கூட செல்லாமல் முழு நேரமாக அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இதற்கிடையே ரயில்வே தேர்வு வாரியம் Group - D பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக்காக பலர் படித்து வரும் நிலையில், தமிழக அரசு சார்பில் ரயில்வே தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

23
போட்டித் தேர்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள்

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், உளவியல் பகுப்பாய்வு சோதனைகளுடன் கூடிய வழிகாட்டுதல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், போட்டித் தேர்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள், கல்வி தொலைக்காட்சி வாயிலாக போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

33
பயிற்சி வகுப்பு நடைபெறும் நேரங்கள்

போட்டி தேர்வுகளுக்கு, திறமையான, அனுபவமிக்க பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பாடக்குறிப்புகள், தினசரி, மாத இதழ்கள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் ஆகியவை வழங்கப்படுவதுடன் பாடவாரியான துணைத் தேர்வுகள், மாதிரித் தேர்வுகள் ஆகியவையும் நடத்தப்பட்டு வருகின்றன. 

தற்போது, RRB Group - D போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்பானது பிப்ரவரி 11ம் தேதி (நாளை) முதல் திங்கள் முதல் வெள்ளி வரையிலான அனைத்து வேலைநாட்களிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.

மேலும் விவரங்களுக்கு...

ஆகவே ரயில்வே வேலைக்கு தயாராகுபவர்கள் இந்த இலவச பயிற்கு வகுப்பில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம், A-28, முதல் தளம், டான்சி கட்டிடம், திரு.வி.க தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 32 என்ற அலுவலக முகவரியில் நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும் 044-22500134 மற்றும் 9361566648 ஆகிய தொலைபேசி எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories