Salem Steel Plant சேலம் உருக்காலையில் (SAIL) அசிஸ்டன்ட் மேனேஜர் மற்றும் ஜூனியர் இன்ஜினியரிங் அசோசியேட் பணிகளுக்கு வேலைவாய்ப்பு. சம்பளம் ரூ. 1,80,000/− வரை.
Salem Steel Plant சேலம் உருக்காலையில் (SAIL) மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு!
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனமான SAIL (Steel Authority of India Limited) சார்பில் இயங்கி வரும் சேலம் உருக்காலையில், நிரந்தரப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மொத்தம் 07 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிகள் மத்திய அரசு வேலை வாய்ப்பின் கீழ் வருவதால், நாடு முழுவதும் உள்ள தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 26, 2025 ஆகும்.
26
பதவி வாரியான சம்பளம் மற்றும் கல்வித் தகுதி
ரூ. 1.8 லட்சம் வரை சம்பளம்
சேலம் உருக்காலையில் அறிவிக்கப்பட்டுள்ள இருவேறு பதவிகளுக்கும் தகுதியும், சம்பள விவரங்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
36
பதவி: Assistant Manager (Safety) (E1)
• காலியிடங்கள்: 01
• சம்பளம்: மாதம் ரூ. 60,000 – 1,80,000/-
• கல்வித் தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் முழுநேர B.E/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன், குறைந்தது 02 ஆண்டுகள் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராகப் பணியாற்றிய அனுபவம், மற்றும் தொழில் பாதுகாப்பு (Industrial Safety) பிரிவில் PG பட்டம் அல்லது டிப்ளமோ (குறைந்தது 1 ஆண்டு) முடித்திருக்க வேண்டும். தமிழ் மொழியறிவு விரும்பத்தக்கது.
• கல்வித் தகுதி: மெக்கானிக்கல்/ எலெக்ட்ரிக்கல்/ கெமிக்கல்/ பவர் பிளான்ட்/ புரொடக்ஷன்/ இன்ஸ்ட்ரூமென்டேஷன் பிரிவுகளில் 03 ஆண்டு முழுநேர டிப்ளமோவுடன், First Class Boiler Attendant Certificate of Competency பெற்றிருக்க வேண்டும்.
56
வயது வரம்பு மற்றும் கட்டண விவரங்கள்
விண்ணப்பக் கட்டணம் சலுகைகள்
• வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும் (கடைசி தேதியின்படி).
• வயது தளர்வு: SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் பிற சலுகைகள் அரசு விதிமுறைப்படி உண்டு.
• விண்ணப்ப கட்டணம்:
o ST/SC/Ex-s/PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
o மற்ற பிரிவினருக்கு ரூ. 600/- ஆகும்.
66
தேர்வு செய்யும் முறை மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறை
ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல்
இப்பணிகளுக்குத் தகுதியானவர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் (Interview) மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.
• விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://sailcareers.com/ என்ற SAIL-இன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
• முக்கிய குறிப்பு: விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தகுதிகளும் தங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். இந்த அரிய மத்திய அரசு வேலைவாய்ப்பை தமிழகப் பொறியாளர்கள் தவறவிடாதீர்கள்.