அதிரடி அறிவிப்பு! 12ஆம் வகுப்பு படித்தால் போதும்: ₹1.77 லட்சம் வரை சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

Published : Oct 09, 2025, 08:50 PM IST

IWAI Recruitment 2025 இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையத்தில் (IWAI) LDC, Surveyor உட்பட 14 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு. 12ஆம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹1,77,500 வரை. கடைசி நாள்: 05.11.2025 மத்திய அரசின் அட்டகாசமான வேலை!

PREV
14
IWAI Recruitment 2025 இந்திய நீர்வழி ஆணையத்தில் (IWAI) மத்திய அரசு வேலை

மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையம் (Inland Waterways Authority of India - IWAI), தற்போது நாடு முழுவதும் உள்ள காலியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 14 பணியிடங்களை நிரப்பத் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 07.10.2025 மற்றும் கடைசி தேதி 05.11.2025 ஆகும்.

24
12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு Lower Division Clerk (LDC) பணி

இந்த அறிவிப்பில், 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மிக முக்கியமான வாய்ப்பாக Lower Division Clerk (LDC) பதவி அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 4 காலியிடங்கள் உள்ளன. இதற்கு மாதம் ₹19,900 முதல் ₹63,200 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் தேவை. வயது வரம்பு 27-க்கு மேற்படாமல் இருக்க வேண்டும்.

34
மற்ற உயர் பதவிகளும், அதற்கான சம்பள விவரங்களும்

LDC தவிர, அதிக சம்பளம் மற்றும் நிபுணத்துவம் தேவைப்படும் பதவிகளும் இதில் உள்ளன.

• Junior Hydrographic Surveyor (9 காலியிடங்கள்): மாதம் ₹35,400 – ₹1,12,400 வரை சம்பளம். சிவில் இன்ஜினியரிங் பட்டம் அல்லது டிப்ளமோவுடன் 3 வருட அனுபவம் தேவை. அதிகபட்ச வயது வரம்பு 30.

• Senior Accounts Officer (1 காலியிடம்): மாதம் ₹56,100 – ₹1,77,500 வரை சம்பளம். Chartered Accountants அல்லது Costs and Works Accountants இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், வணிகக் கணக்குகள் துறையில் மூன்று ஆண்டுகள் அனுபவம் அவசியம். அதிகபட்ச வயது வரம்பு 35.

44
தேர்வு செய்யும் முறை மற்றும் சலுகைகள்

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், பதவிக்கு ஏற்ப வெவ்வேறு தேர்வு முறைகளை எதிர்கொள்வார்கள். LDC பதவிக்கு CBT (கணினி அடிப்படையிலான தேர்வு) மற்றும் Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். Junior Hydrographic Surveyor பதவிக்கு CBT மட்டுமே. Senior Accounts Officer பதவிக்கு CBT மற்றும் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு நடைபெறும். SC/ST/Ex-servicemen/PwBD பிரிவினருக்குக் கட்டணம் கிடையாது. மற்றவர்கள் ₹500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் வயது தளர்வு வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் https://iwai.nic.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories