தமிழக அரசின் மெகா அறிவிப்பு! 10வது முதல் டிகிரி வரை வேலை! தேர்வு இல்லாமல் 1096 காலிப் பணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்!

Published : Oct 09, 2025, 08:35 PM IST

TN Rights Project Jobs 2025 தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் (DWDA) Block Coordinator, Specialist பதவிகள் உட்பட 1096 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10வது முதல் டிகிரி வரை கல்வி தகுதியுடன் ₹35,000 வரை சம்பளம் பெறலாம். எழுத்துத் தேர்வு இல்லை.

PREV
14
TN Rights Project Jobs 2025 தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் (DWDA) பிரம்மாண்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரகத்தின் (DWDA) கீழ் செயல்படும் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் (TN Rights Project), ஒரு மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்வு எதுவும் இன்றி, 1096 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் இப்போது வரவேற்கப்படுகின்றன. இந்த அறிவிப்பு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை பலருக்கும் அருமையான வேலைவாய்ப்பை வழங்குகிறது. விண்ணப்பிக்கக் கடைசித் தேதி 14.10.2025 என்பதால், விரைந்து விண்ணப்பிப்பது அவசியம்.

24
பல பதவிகளும், அதற்கான சம்பள விவரங்களும்

இந்தத் திட்டத்தின் கீழ், Block Coordinator, Rehabilitation and Case Manager, Psychologist/Counsellor, Special Educator, Occupational Therapist, Optometrist/Mobility Instructor, Junior Administrative Support, Multi-Purpose Worker, மற்றும் Office Helper (அலுவலக உதவியாளர்) என பல்வேறு நிலைகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் Block Coordinator, Case Manager, Psychologist போன்ற உயர் பதவிகளுக்கு மாதம் ₹30,000 முதல் ₹35,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Multi-Purpose Worker போன்ற பணிகளுக்கு மாதம் ₹12,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.

34
கல்வித் தகுதியும், காலியிடங்களின் எண்ணிக்கையும்

மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள 1096 காலியிடங்களில், ஒவ்வொரு பணிக்கும் தனிப்பட்ட கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

• Block Coordinator (250 காலியிடங்கள்): B.E/B.Tech அல்லது Rehabilitation Science/Physiotherapy/Occupational Therapy/Speech Therapy/Special Education/Psychology/Social Work/Public Administration ஆகியவற்றில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம்.

• Rehabilitation and Case Manager (94 காலியிடங்கள்): Rehabilitation Science/Physiotherapy/Occupational Therapy/Speech Therapy/Special Education/Psychology ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டம்.

• Psychologist/Counsellor (94 காலியிடங்கள்): உளவியலில் (Counselling/Behavioural/Clinical) முதுகலைப் பட்டம். மாற்றுத்திறனாளிகளுடன் பணிபுரிந்த அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

• Special Educator, Occupational Therapist, Optometrist (தலா 94 காலியிடங்கள்): இந்தப் பதவிகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் இளங்கலை/முதுகலைப் பட்டம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கவுன்சில்களின் பதிவும் தேவை.

• Junior Administrative Support (94 காலியிடங்கள்): ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டத்துடன், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு (Type Writing) சான்றிதழ் தேவை.

• Multi-Purpose Worker & Office Helper (மொத்தம் 282 காலியிடங்கள்): இந்தப் பணிகளுக்கு 10ஆம் வகுப்பு அல்லது 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

44
தேர்வு செய்யும் முறை: கட்டணம் இல்லை!

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க எந்தவிதமான கட்டணமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பதாரர்கள் Shortlisting மற்றும் ஆவணச் சரிபார்ப்பு (Document Verification) ஆகிய இரண்டு நிலைகளின் மூலம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு எதுவும் கிடையாது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புபவர்கள், அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnrightsjobs.tnmhr.com/ மூலம் 14.10.2025 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, தேவையான தகுதிகள் மற்றும் ஆவணங்களை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.

Read more Photos on
click me!

Recommended Stories