10வது பாஸ் போதும்: இஸ்ரோவில் ரூ.69,000 சம்பளத்தில் வேலை

Published : Sep 07, 2024, 10:47 PM IST

பெங்களூருவில் செயல்பட்டு வரும் இஸ்ரோவின் LPSC மையத்தில் காலியாக உள்ளப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வருகின்ற 10ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
14
10வது பாஸ் போதும்: இஸ்ரோவில் ரூ.69,000 சம்பளத்தில் வேலை
Job Offer

இந்திய விண்வெளி ஆய்வு மையத்திற்குச் சொந்தமான திரவ உந்து அமைப்பு மையத்தில் காலியாக உள்ள 30 டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டு இருந்தது. அதன்படி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ஐடிஐ முடித்தவர்கள், ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

24
Job Offer

விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு கல்வி தகுதியுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மேலும் துறை சார்ந்தப் பணியில் போதிய பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும். சமையல் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஓட்டுநர் பணிக்கு எல்எம்வி உரிமம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக 3 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

34
Job Offer

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துப் பணியிடங்களுக்கும் விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 ஆகும். அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

44
Job Offer

டெக்னீசியன் பணியிடங்களுக்கு ரூ.750 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பின்னர் இக்கட்டணத்தில் ரூ.500 விண்ணப்பதாரர்களுக்கே திரும்ப செலுத்தப்படும். எஸ்.சி., எஸ்.டி பிரிவினர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு முழு கட்டணமும் திரும்ப செலுத்தப்படும். சமையலர், ஓட்டுநர் உள்ளிட்டப்பணியிடங்களுக்கு ரூ.500 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். அவர்களுக்கு ரூ.400 திரும்ப செலுத்தப்படும்.

ஆர்வம் உள்ள இளைஞர்கள் தங்கள் விண்ணப்பத்தை வருகின்ற 10ம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.ipsc.gov.in என்ற இணையதள பக்கத்தை ஆய்வு செய்யவும்.

Read more Photos on
click me!

Recommended Stories