Cognizant Job Vacancies:கோவை காக்னிசன்ட்டில் வாரத்தில் 3 நாள் மட்டுமே ஆபிசில் வேலை! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Published : Sep 07, 2024, 01:43 PM IST

Cognizant Job Vacancies: கோவை காக்னிசன்ட் நிறுவனத்தில் ப்ராசஸ் எக்ஸிக்கியூட்டிவ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

PREV
14
Cognizant Job Vacancies:கோவை காக்னிசன்ட்டில் வாரத்தில் 3 நாள் மட்டுமே ஆபிசில் வேலை! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பன்னாட்டு நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்களில் ஒன்று காக்னிசன்ட். இந்நிறுவனம் தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில்  செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை காக்னிசன்ட் நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான  கல்வி தகுதி, வயது வரம்பு, அனுபவம் குறித்த முழு விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. 

24
Cognizant

தற்போதைய அறிவிப்பின்படி காக்னிசண்ட் நிறுவனத்தில் ப்ராசஸ் எக்ஸிக்கியூட்டிவ் (Process Executive) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் அதாவது பிஇ, பிடெக், பிசிஏ, எம்சிஏ, எம்பிஏ, எம்எஸ்சி படித்தவர்களை தவிர மற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

34

குறிப்பாக விண்ணப்பம் செய்வோர் அமெரிக்காவின் Inbound/Outbound கால்ஸ் பேசிய அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். எம்எஸ்ஆபிஸ் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வெவ்வேறு ஷிப்ட்டுகளில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். மேலும் டீம் பிளேயராக இருக்க வேண்டும். இவை எல்லாவற்றிக்கும் மேலாக ஆங்கிலம் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கான சம்பளம் குறித்த தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். 

44
Cognizant

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் கோவையில் பணியமர்த்தப்படுவர். இது ஒரு ஹைபிரிட் (Hybrid) முறையிலான பணியாகும். இதனால் வாரத்தில் 2 நாட்கள் வீட்டில் இருந்தும், வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்தில் இருந்தும் வேலை செய்ய முடியும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு Cognizant அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாள் முடிவதற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Read more Photos on
click me!

Recommended Stories