தூங்குறதும் ஒரு வேலைதான் பாஸ்! தினமும் 8 மணிநேரம் தூங்கினா ரூ.10 லட்சம் கிடைக்கும்!!

Published : Sep 05, 2024, 05:35 PM ISTUpdated : Sep 05, 2024, 06:05 PM IST

நன்றாகத் தூங்குவதற்கு பணம் கொடுக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் இது உண்மைதான். Wakefit என்ற நிறுவனம் தூங்குபவர்களுக்கு பணம் கொடுத்து ஊக்குவிக்கத் தயாராக இருக்கிறது.

PREV
15
தூங்குறதும் ஒரு வேலைதான் பாஸ்! தினமும் 8 மணிநேரம் தூங்கினா ரூ.10 லட்சம் கிடைக்கும்!!
Wakefit Professional Sleep Intern

நன்றாகத் தூங்குவதற்கு பணம் கொடுக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் இது உண்மைதான். Wakefit என்ற நிறுவனம் தூங்குபவர்களுக்கு பணம் கொடுத்து ஊக்குவிக்கத் தயாராக இருக்கிறது. இதற்காக பிரத்யேகமான புரொபஷனல் ஸ்லீப் இன்டர்ன் என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.

இது ஒரு இன்டர்ன்ஷிப் மாதிரி இல்லை. இந்த புரொபஷனல் ஸ்லீப் இன்டர்ன் திட்டம், தூக்கத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கும், எல்லாவற்றில் இருந்தும் ஓய்வு எடுக்க நினைப்பவர்களுக்கும் ஒரு அரிதான வாய்ப்பை வாய்ப்பை வழங்குகிறது. இது குறித்து LinkedIn சமூக வலைத்தளத்தில் விரிவான விளக்கத்தைப் பகிர்ந்துள்ளது.

25
Work from Bed

பணியின் பெயர்: புரொபஷனல் ஸ்லீப் இன்டர்ன், பணியிடம்: படுக்கையில் இருந்தே வேலை (Work from Bed), பணிக்காலம்: 2 மாதங்கள், உதவித்தொகை: ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

ஒரு இரவுக்கு 8-9 மணி நேரம் தொடர்ந்து தூங்க வேண்டும். பகலில் 20 நிமிட தூக்கம் போட்டாலும் நல்லது. வசதியாகத் தூங்க இலவச இலவச மெத்தை ஒன்றும் வழங்கப்படும். தினமும் தூங்கிய நேரம் பற்றி Wakefit க்கு ரிப்போர்ட் செய்ய வேண்டும். வார இறுதி நாட்களில் தூக்க நேரத்தை நீட்டிக்க வேண்டியிருக்கும்.

அனுபவம் வாய்ந்த ‘தூங்க ஆலோசகர்களை’ச் சந்தித்து பயிற்சிப் பெறவும் வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் தூக்கத்தை அதிகப்படுத்தி ‘ஸ்லீப் சாம்பியன்’ ஆக பதவி உயர்வு பெறுவதற்கும் வாய்ப்பு உண்டு.

35
Sleep intern qualifications

தினமும் இரவு ஒரே நேரத்தில் உறங்கச் செல்பவர்கள், மற்ற வேலைகளுக்கு மத்தியில் தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுப்பவர்கள்,  போன் அழைப்புகள், வெளியிடங்களுக்குச் செல்வதற்கான திட்டங்களையும் புறக்கணித்துவிட்டு தூக்கத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவர்களாக இருக்க வேண்டும். தூக்கத்தை ஒத்திப்போடுவது என்ற பேச்சுக்கே இடம்கொடுக்கக் கூடாது.

45
Ideal Sleep intern

22 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். உறக்கத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் தூக்கத்தில் PhD பட்டம் வாங்குவதற்குத் தயாராக இருக்க வேண்டும்.

55
Sleep intern compensation

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு தூக்கவாதிக்கும் தலா 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இந்த ஆண்டின் "ஸ்லீப் சாம்பியன்" ஆக தேர்வு செய்யப்படும் நபருக்கு ரூ.10 லட்சம் வரை சன்மானம் கிடைக்கும்.

click me!

Recommended Stories