தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டுள்ளது. தேர்வு எழுத உள்ள விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன. இதில், குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல நிலைகளில் தேர்வு நடத்தப்படுகின்றன. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பணியில் 2,327 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் 20ம் தேதி வெளியாகி ஜூலை 19 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
25
TNPSC Exam
குரூப் 2-வில் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு உதவியாளர், சென்னை மாநகர காவல் தனிப்பிரிவு உதவியாளர் உள்பட 507 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
அதேபோல், குரூப் 2ஏ-வில் தமிழ்நாடு மின்விசை நிதி, வருவாய் உதவியாளர், கூட்டுறவு சங்கங்கள் முதுநிலை ஆய்வாளர் உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி ஆய்வாளர் என 48 துறைகளில் 1820 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வுக்கு தமிழக முழுவதும் மொத்தமாக 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்ததனர். இந்நிலையில் செப்டம்பர் 14ம் நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் -2க்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகியுள்ளது.
45
Hall Ticket
ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி?
தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் ஹால் டிக்கெட்டை தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற பக்கத்திற்குச் செல்ல வேண்டும். அதில் ஏற்கனவே பதிவு செய்தோர் என்ற பொத்தானை அழுத்தவும். பின்னர் உங்கள் நிரந்தரப் பதிவு மற்றும் கடவுச்சொல் கொண்டு உள்நுழையவும். இப்போது திரையில் உங்கள் சுயவிவர பக்கத்தில், ஹால் டிக்கெட் என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
இப்போது திரையில் தோன்றும் TNPSC ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு (CCSE-II) 2024 என்பதற்கு நேராக டவுன்லோட் ஹால் டிக்கெட் என்று இருக்கும் இணைப்பை கிளிக் செய்ய வேண்டும். இப்போது திரையில் தோன்றும் புதிய பக்கத்தில் உங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி கொண்டு உள்நுழைய வேண்டும். இப்போது திரையில் குரூப் 2 தேர்வு ஹால் டிக்கெட் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும். எழுத்து தேர்வானது செப்டம்பர் 14ம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிர் நடைபெற உள்ளது.