Elon Musk
டெஸ்லா வேலை வாய்ப்பு
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கிற்கு சிறப்பு அறிமுகம் தேவையில்லை. அவரது நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோர் வேலை செய்கின்றனர். எலக்ட்ரிக் கார் பிரிவில் டெஸ்லா கார்களுக்கு இருக்கும் மோகம் குறைந்தபாடில்லை
சிறப்பு வேலை வாய்ப்பு
சமீபத்தில், எலோன் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் ஒரு தனித்துவமான வேலைவாய்ப்பை அறிவித்தது. ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் நடக்க வேண்டும். அந்த வேலைக்கு $340 சம்பளம் வழங்கப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ.28,000. அதாவது ஒரு மணி நேரத்திற்கு ₹4,000 வழங்கப்படுகிறது.
அமெரிக்காவில் வேலை
இது அலுவலக வேலை இல்லை. குறிப்பிட்ட தேவைக்காக இந்த வேலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இந்த வேலைக்கு மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியம் போன்ற வசதிகளும் உள்ளன. இந்த வேலை அமெரிக்காவில் கிடைக்கிறது.
நடந்து சென்று பணம் பெறுங்கள்
மேலும், இந்த பணிக்கான குறைந்தபட்ச தகுதி 5ம் வகுப்பு தேர்ச்சி. பெற்றிருக்க வேண்டும். "Data சேகரிப்பு மேலாளர்" என்று அழைக்கப்படும் இந்த வேலை, மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மனித உருவ ரோபோக்களைப் பயிற்றுவிப்பதற்கான டெஸ்லாவின் முயற்சியின் ஒரு பகுதியாகும்.
டெஸ்லாவில் வேலைகள்
இந்தப் பணியில் சேரும் பணியாளர்கள் மோஷன் கேப்சர் சூட் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்களை அணிய வேண்டும். இதற்காக அவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு சுமார் ₹4,000 ($48) வழங்கப்படுகிறது. இந்த வேலை ரோபோக்களின் செயல்திறனை மேம்படுத்த தகவல்களை சேகரித்து பகுப்பாய்வு செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.
டேட்டா சேகரிப்பு ஆபரேட்டர்
விண்ணப்பதாரர்கள் தகுதி பெற சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அவர்களின் உயரம் 5'7" முதல் 5'11" வரை இருக்க வேண்டும். மேலும், அவர்கள் மெய்நிகர் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்த வேலை தற்போது அமெரிக்காவில் மட்டுமே உள்ளது.