Inefficiency
பல பொறியியல் பாடத்திட்டங்களில் பலருக்கு தொழில் அனுபவமும் நடைமுறை பயிற்சியும் போதிய அளவு இல்லாததால், பட்டதாரிகளுக்கு எளிதில் வேலையில் சேர்வது கடினமாக உள்ளது.
Class difference
பொருளாதார ஏற்றத்தாழ்வு, தொழில் விருப்பங்களில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவையும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு வேலை கிடைப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு காலத்தில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கிய ஐ.டி, இ-காமர்ஸ் போன்ற துறைகள் மந்தநிலையில் உள்ளன. இதுவும் வேலைவாய்ப்புகளைக் குறைத்துள்ளது..
Soft Skills
எஞ்சினியர்களுக்கு தொழில்நுட்பத் திறமை முக்கியம்தான். ஆனால், தகவல் தொடர்பு, குழுவாக வேலை செய்தல், பிரச்சினைகளை எதிர்கொண்டு தீர்வு காணுதல் போன்ற சவால்கள் உள்ளன. இதுபோன்ற திறன்களை வளர்த்துக்கொள்வது வேலைவாய்ப்புக்கு உதவும். நிறுவனங்களும் இதையே விரும்புகின்றன.
Competition in Job market
ஐஐடி போன்ற இந்தியாவின் முன்னணி பொறியியல் கல்வி நிறுவனங்களில் இன்னும் அதிக சம்பளத்துடன் வேலைவாய்ப்பு பெறுபவர்கள் உள்ளன. ஆனால் பொறியியல் துறையில் பட்டதாரிகள் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்வதால், போட்டி அதிகரித்துவிட்டது.
unemployed
இஞ்சினியிரிங் முடித்த மாணவர்கள் வேலை தேடிச் செல்லும்போது, நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்கள் நம்மிடம் இருக்கறதா என்று பார்க்கத் தவறுகிறார்கள். இதனாலேயே பொறியியல் படித்த பலர் வேலையில்லா பட்டதாரிகளாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
Vacancies
கொஞ்ச காலத்திற்கு முன் பொறியியல் துறையில் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடந்ததன. இத்துறையில் பணிபுரிவது கௌரவமாகப் பார்க்கப்பட்டது. அந்த மரியாதை இன்னும் இருக்கிறது. ஆனால் பொறியியல் மாணவர்களில் 10 சதவீதம் பேர் மட்டும் தான் தங்கள் துறையிலேயே பணிபுரியும் வாய்ப்பு பெறுகிறார்கள்.