Published : Aug 28, 2024, 01:38 PM ISTUpdated : Aug 28, 2024, 08:50 PM IST
சென்னையில் அமைந்துள்ள ஜோஹோ கார்ப்பரேஷன் காலியாக உள்ள பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளது. ஜோஹோ நிறுவனத்தில் சேர அருமையான வாய்ப்பு இது. விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதி, சம்பளம், தேர்வு முறை போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
ஜோஹோ நிறுவனத்தில் வேலை என்றாலே உடனே பலரும் வேலைக்கு விண்ணப்பிப்பார்கள். தற்போது ஜோஹோ கார்ப்பரேஷன் (Zoho Corporation) வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜோஹோ நிறுவனம் மென்பொருள் மேம்பாட்டுத் துறையில் நன்கு அறியப்பட்ட உலகளாவிய நிறுவனமாகும்.
25
Zoho Corporation
ஜோஹோ நிறுவனம் சென்னை, மதுரை, தென்காசி என பல இடங்களில் கிளைகளை அமைத்துள்ளது. காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த விவரங்களை தற்போது ஜோஹோ அறிவித்துள்ளது. ஜோஹோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் விஷுவல் டிசைனர் பணிக்கு ஆட்களை நிரப்ப உள்ளது. இவ்வேலை ஆனது சென்னையில் இருக்கும் என்றும், இது முழுநேர வேலை என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
35
Zoho Jobs
இப்பணிக்கு வினைப்பிப்பருக்கு பல்வேறு டிஜிட்டல் தளங்களுக்கான காட்சி கூறுகளை உருவாக்கி வடிவமைக்கவும், இணையதளங்கள், செயலிகள் மற்றும் சந்தைப்படுத்தல் பொருட்களுக்கான ஈடுபாடு போன்றவற்றை கொண்டிருக்க வேண்டும். கிராஃபிக் டிசைன், விஷுவல் கம்யூனிகேஷன் அல்லது தொடர்புடைய துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருத்தல் அவசியம்.
45
Visual Designer
அடோப் கிரியேட்டிவ் சூட் (ஃபோட்டோஷாப், இல்லஸ்ட்ரேட்டர், எக்ஸ்டி) மற்றும் பிற தொடர்புடைய மென்பொருள் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நல்ல வலுவான போர்ட்ஃபோலியோ மற்றும் நல்ல தகவல் தொடர்பு திறன் மற்றும் குழு சூழலில் பணிபுரியும் திறன் போன்றவற்றை கொண்டிருத்தல் அவசியம்.
55
Private Jobs Recruitment 2024
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஜோஹோவின் கேரியர் பக்கத்தைப் பார்வையிடவும் அல்லது விண்ணப்ப செயல்முறை குறித்த கூடுதல் விவரங்களுக்கு அவர்களின் ஹெச்ஆர் குழுவைத் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க, ஜோஹோவின் அதிகாரப்பூர்வ கேரியர் போர்ட்டலைப் பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம்.