இந்தியன் ரயில்வேயில் இளநிலை பொறியாளர், டிப்போ பொருள் கண்காணிப்பாளர், ரசாயன மற்றும் உலோக உதவியாளர் உள்பட மொத்தமாக 7951 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இந்தியன் ரயில்வேயின் ஆள் சேர்ப்பு வாரியம் வெளியிட்டது. இதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக பூர்த்தி செய்ய இன்றே கடைசி தேதியாகும்.
கண்காணிப்பாளர் மற்றும் ஆராய்ச்சி ஆகிய பணிகளுக்கு 17 இடங்களும், இளநிலை பொறியாளர், பொருள் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு மொத்தமாக 7934 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
இந்தியன் ரயிலவேயில் உள்ள இப்பணியிடங்களுக்கு 2025 ஜனவரி 1ம் தேதி படி குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 36 வயது வரம்பு இருக்கலாம். பொதுப்பிரிவினர் 02-01-1989ம் ஆண்டுக்கு பின்னர் பிறந்திருக்கக் கூடாது. ஓபிசி பிரிவினர் 02-01-1986ம் ஆண்டுக்கு பின்னர் பிறந்திருக்கக் கூடாது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கூடுதலாக 5 ஆண்டுகள், ஓபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.
இரசாயன மற்றும் உலோகவியல் கண்காணிப்பாளர், ஆராய்ச்சி பதவிகளுக்கு நிலை 7ன் படி குறைந்தபட்சம் ரூ.44 ஆயிரத்து 900 முதல் அதிகபட்சமாக 1 லட்சத்து 42 ஆயிரத்து 400 வழங்கப்படும். இளநிலை பொறியாளர், கண்காணிப்பாளர், உலோகவியல் உதவியாளர் பதவிக்கு குறைந்தபட்சம் ரூ.35 ஆயிரத்து 400 முதல் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 400 வரை மாத சம்பளம் வழங்கப்படுகிறது.
rrb
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் www.rrbchennai.gov.in என்ற ரயில்வே ஆள்சேர்ப்பு வாரியத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்தில் திருத்தம் செய்ய ஆகஸ்ட் 30ம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை செய்து கொள்ளலாம். கணிணி மூலமாக நடைபெறும் தேர்வு குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.