சென்னையில் வேலை தேடுறீங்களா? டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஐஐடி-யில் சூப்பர் போஸ்ட் ரெடி!

Published : Jan 08, 2026, 09:44 PM IST

இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமான சென்னை ஐஐடி, சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்தவர்களுக்காக ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களை அறிவித்துள்ளது. தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படும் இந்தப் பணிக்கு தகுதியானர்வகள் விண்ணப்பிக்கலாம்.

PREV
14
சென்னை ஐஐடி-யில் வேலை

இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமான சென்னை ஐஐடியில் (IIT Madras) பணியாற்ற வேண்டும் என்பது பலரின் கனவு. அந்த கனவை நனவாக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. சிவில் இன்ஜினியரிங் துறையில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

24
பணியிடங்கள், தகுதிகள்

சென்னை ஐஐடியின் தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி மையத்தில் (IC&SR) ஜூனியர் இன்ஜினியர் (Junior Engineer - Civil) பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

காலியிடங்கள்: 03.

கல்வித்தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் டிப்ளமோ (Diploma in Civil Engineering) முடித்திருக்க வேண்டும்.

அனுபவம்: கட்டிட வரைபடங்கள் (Building Drawings) தயாரிப்பதில் குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.

34
சம்பளம் மற்றும் தேர்வு முறை

சம்பளம்: தகுதி மற்றும் அனுபவத்தைப் பொறுத்து மாதம் ரூ. 16,000 முதல் ரூ. 18,000 வரை வழங்கப்படும்.

தேர்வு முறை: விண்ணப்பிப்பவர்களில் தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

44
விண்ணப்பிக்கும் முறை

ஆர்வமுள்ளவர்கள் சென்னை ஐஐடியின் அதிகாரப்பூர்வ இணையதளமான icsrstaff.iitm.ac.in வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

1. இணையதளத்தில் 'Current Openings' பகுதிக்குச் செல்லவும்.

2. 'Junior Engineer' என்ற அறிவிப்பைத் தேர்வு செய்து உங்கள் விவரங்களைப் பதிவிடவும்.

3. கடைசி தேதி: விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஜனவரி 19, 2026.

Read more Photos on
click me!

Recommended Stories