Govt Free Training: இளைஞர்களுக்கு தொழில் தொடங்க இலவச பயிற்சி! சொந்த காலில் நிற்க விரும்புவோருக்கு அட்டகாசமான வாய்ப்பு.!

Published : Nov 27, 2025, 12:59 PM IST

திருநெல்வேலி மாவட்ட கிராமப்புற இளைஞர்களுக்காக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் RSETI நிறுவனம் "இருசக்கர வாகனப் பழுது நீக்குதல்" மற்றும் "வீட்டு உபயோக மின் சாதனங்கள் பழுது சரி செய்தல்" ஆகிய இலவச பயிற்சிகளை வழங்குகிறது. 

PREV
13
யூத் மக்களே நீங்க ரெடியா?

திருநெல்வேலி மாவட்ட கிராமப்புற இளைஞர்களுக்காக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB)சார்பில் செயல்படும் ஊரக சுயதொழில் பயிற்சி நிறுவனம் (RSETI) மூலம் “இருசக்கர வாகனப் பழுது நீக்குதல்” மற்றும் “வீட்டு உபயோக மின் சாதனங்கள் பழுது சரி செய்தல்” தொடர்பான இலவச தொழில் பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை மற்றும் மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் இணைப்பில் நடத்தப்படுகிறது.

23
பயிற்சியின் சிறப்பம்சங்கள்

பயிற்சி காலம் : 30 நாட்கள்

பயிற்சி முறைகள் 

  • இருசக்கர வாகனங்களின் அடிப்படை மற்றும் மேம்பட்ட பழுதுகளை கண்டறிந்து சரிசெய்வது
  • வீட்டு உபயோக மின் சாதனங்களின் பழுது நீக்குதல்
  • தொழில் தொடங்குவது எப்படி, வணிகத் திட்டம் தயாரித்தல், சந்தைப்படுத்தல், வங்கி கடன் பெறுவது போன்ற தொழில் முனைவர் பயிற்சிகள்

கூடுதல் பயிற்சிகள் : அடிப்படை கணினி பயிற்சி, மென்மைத் திறன்கள் (Soft Skills)

சான்றிதழ் : பயிற்சி முடித்தவர்களுக்கு அதிகாரப்பூர்வ சான்றிதழ் வழங்கப்படும்

சுயதொழில் வாய்ப்பு : தனிநபர் வேலை ஆரம்பிக்க வங்கி கடன் பெற தேவையான வழிகாட்டல் வழங்கப்படும்

33
தகுதி, பயிற்சியின் பயன்

தகுதி

  • வயது : 18 முதல் 45 வரை
  • கல்வித் தகுதி : குறைந்தது 8ஆம் வகுப்பு தேர்ச்சி
  • வசதி : தங்குமிடம், உணவு உள்ளிட்ட அனைத்தும் முழுக்க முழுக்க இலவசம்

பயிற்சியின் பயன்

  1. இந்த பயிற்சி கிராமப்புற இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறன்களை உயர்த்துவதோடு,
  2. தனியாக ஒரு மெக்கானிக் கடை தொடங்க
  3. அருகிலுள்ள தொழிற்சாலைகள், வொர்க்ஷாப்களில் வேலை பெற
  4. குடும்ப வருமானத்தை மேம்படுத்த மிகவும் பயனுள்ளதாக அமையும்.

இளைஞர்கள் திறமையை வளர்த்து, தங்கள் கிராமத்திலேயே சுயதொழில் தொடங்க உதவும் சிறந்த வாய்ப்பு இது. தொழில் திறன் கற்க விரும்பும் இளைஞர்கள் இப்பயிற்சியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தொடர்புக்கு 

Indian Overseas Bank-வின் Rural Self Employment Training Institute (RSETI), மஹாராஜநகர், 5th Cross Street, A-63, First Floor, Tirunelveli – 627011. 

இயக்குனர் 

மொபைல்: 09443418444 

அலுவலக எண்: 0462-2574265 

Email (மின்னஞ்சல்): tvlirtc@tirsco.iobnet.co.in. 

Read more Photos on
click me!

Recommended Stories