Free Training: விவசாயிகளே உங்களுக்கு செம சான்ஸ்.! பாரம்பரிய நெல் சாகுபடி, முயல் வளர்ப்பு பயிற்சி.! மானியம், கடனுதவி வாய்ப்புகளும் காத்திருக்கு.!

Published : Nov 14, 2025, 07:41 AM IST

செங்கல்பட்டு மாவட்டம் காட்டுப்பாக்கத்தில் உள்ள வேளாண் அறிவியல் மையம் விவசாயிகளுக்காக இயற்கை விவசாயம், பாரம்பர்ய நெல் சாகுபடி மற்றும் விஞ்ஞான முறை முயல் வளர்ப்பு குறித்து இரண்டு இலவசப் பயிற்சிகளை நடத்துகிறது. சுயதொழில் தொடங்க இந்த பயிற்சி வழிகாட்டும்.

PREV
14
இலவச பயிற்சியில் பங்கேற்க அழைப்பு

செங்கல்பட்டு மாவட்டம் காட்டுப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் வேளாண் அறிவியல் மையம், விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்பில் ஆர்வம் உடையவர்களுக்கும் மிக முக்கியமான இரண்டு பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது. இயற்கை விவசாய முறைகள், பாரம்பரிய நெல் வகைகளின் சிறப்புகள், மற்றும் முயல் வளர்ப்பின் விஞ்ஞான ரீதியான நுணுக்கங்கள் என பல துறைகளை ஒரே இடத்தில் கற்றுக்கொள்ள ஏற்ற சூழல் இங்கு அமைந்துள்ளது.

24
‘இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பர்ய நெல் சாகுபடி பயிற்சி

நவம்பர் 19-ம் தேதி நடைபெற உள்ள ‘இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பர்ய நெல் சாகுபடி பயிற்சி’, பாரம்பரிய நெல் வகைகளின் முக்கியத்துவம், ரசாயனமில்லா இயற்கை விவசாய முறைகள், நவீன தொழில்நுட்பங்களை இணைத்து உற்பத்தி உயர்த்தும் வழிகள் போன்றவற்றை விவசாயிகளுக்கு நேரடியாக கற்றுத்தரும். மண்ணின் வளத்தை காப்பதோடு, குறைந்த செலவில் அதிக விளைச்சல் பெற இயற்கை விவசாயம் எப்படி உதவுகிறது என்பதை நிபுணர்கள் எளிமையாக விளக்க உள்ளனர்.

34
முயல் வளர்ப்பு பயிற்சி

அதேபோல், நவம்பர் 26-ம் தேதி நடைபெறும் ‘விஞ்ஞான முறையில் முயல் வளர்ப்பு’ பயிற்சி, இன்றைய காலத்தில் அதிக வருமானம் தரக்கூடிய சிறு தொழில்களில் முக்கியமான முயல் வளர்ப்பு முறைகளை விவரிக்கிறது. முயல்களின் இனப்பெருக்கம், தீவன மேலாண்மை, நோய் தடுப்பு, குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறும் நடைமுறை வழிமுறைகள் போன்றவை இந்த பயிற்சியின் முக்கிய அம்சங்கள் ஆகும். வீட்டு தோட்டங்களிலும், சிறுபான்மையான நிலப்பரப்பிலும் கூட முயல் வளர்ப்பை தொடங்க முடியும் என்பதால், இது பெண்கள் சுயதொழில் முயற்சிகளுக்கும், இளைஞர்கள் தொழில் தொடக்கத்திற்கும் சிறந்த வாய்ப்பு எனலாம்.

44
பயிற்சியில் பங்கேற்க முன்பதிவு அவசியம்

இரண்டு பயிற்சிகளிலும் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம் என மையம் தெரிவித்துள்ளது. ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பெயர் பதிவு செய்யவும், கூடுதல் தகவல்களை பெறவும் கீழ்க்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளலாம். செல்: 99405 42371. முன்பதிவு செய்யதால் மட்டும் இருக்கை மற்றம் இதர அடிப்படை வசதிகளை முறையாக செய்யமுடியும் என வேளாண் அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories