மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் அடுத்த அகவிலைப்படி (DA) உயர்வுக்காக ரொம்ப நாளா காத்துட்டு இருக்காங்க. 2026 ஜூலை மாசத்துக்கான DA உயர்வு, ஏழாவது ஊதியக் குழுவின் கீழ் சம்பளத்தையும் பென்ஷனையும் இன்னும் அதிகமாக்கும்.
ஜூன் மாசத்துக்கான அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டு (AICPI-IW) தரவுகளின்படி, தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு DA 3% உயரும்னு எதிர்பார்க்கப்படுது. இதனால தற்போதைய 60% லிருந்து 63% ஆக இது மாறும். முன்னதாக, 2026 ஏப்ரல் மாசம் நடந்த கேபினட் மீட்டிங்ல, DA-வை 58% லிருந்து 60% ஆக (2% உயர்வு) அரசாங்கம் ஒப்புதல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இதையும் படிக்கலாமே - மாதம் ரூ.50 ஆயிரம் சம்பாதிக்கலாம்.! 3 நாள் பயிற்சிய முடிச்சா போதும்.! இளைஞர்களே உடனே ஜாயின் பண்ணுங்க.!
26
ஜூலை முதல் அமலுக்கு வரப்போகும் புதிய உயர்வு
இப்போதைக்கு எல்லா மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த 60% அடிப்படையில தான் DA கொடுக்குறாங்க. ஜூலை 1, 2026 முதல் அமலுக்கு வரப்போகும் அடுத்த உயர்வுக்காக CCGEW போன்ற யூனியன்கள் காத்துட்டு இருக்காங்க. ஜூன் மாச AICPI-IW தரவுகளின்படி, மேலும் 3% உயர வாய்ப்பு இருக்கு. அரசாங்கம் ஓகே சொன்னா, இது 60% லிருந்து 63% ஆக அதிகரிக்கும். இதையும் படிக்கலாமே -Central Government Employees Bonus 2026: அக்டோபரில் போனஸ் வருமா? ரூ.7,000-ல் இருந்து ரூ.21,000 ஆகுமா?
36
சந்தோஷ அறிவிப்பு காத்திருக்கு மக்களே.!
நுகர்வோர் விலை குறியீட்டு (CPI-IW) தரவுகளின் ஒரு வருட சராசரியை வெச்சு, வருஷத்துக்கு ரெண்டு தடவை (ஜனவரி, ஜூலை) அகவிலைப்படியை (DA) மத்திய அரசு மாத்தி அமைக்கும். தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட ஜூன் 2026-க்கான AICPI-IW தரவுகள் மூலமா, ஜூலை 2026 DA உயர்வுக்கான கடந்த 12 மாத (ஜூலை 2025 - ஜூன் 2026) முழு டேட்டாவும் இப்போ ரெடி ஆயிடுச்சு. இதுவும் பயனுள்ள கட்டுரை - 8th Pay Commission: சிவிலியன் பென்ஷனர்களுக்கும் 'ஒரே ரேங்க் ஒரே பென்ஷன்'.! 8வது ஊதியக் குழுவிடம் கோரிக்கை
ஜூலை 2025 முதல் ஜூன் 2026 வரையிலான CPI-IW தரவுகளின் 12 மாத சராசரி 148.65 ஆக இருக்கு. இந்த சராசரியை ஏழாவது ஊதியக் குழுவின் ஃபார்முலாவுல போட்டா, அகவிலைப்படி (DA) 63.76% ஆக வருது. மத்திய அரசு தசம எண்களை விட்டுட்டு முழு எண்களை மட்டுமே கணக்குல எடுத்துக்கும். அதனால, டெக்னிக்கலா பார்த்தா DA 3% உயர்ந்து, புதிய அகவிலைப்படி 63% ஆக மாறும்.
56
அக்டோபர் முதல் அல்லது இரண்டாவது வாரத்துல வெளியாகும்
அகவிலைப்படி (DA) உயர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை 2026 அக்டோபர் முதல் அல்லது இரண்டாவது வாரத்துல அரசாங்கம் வெளியிடும்னு எதிர்பார்க்கப்படுது. வழக்கமா துர்கா பூஜை, தசரா, தீபாவளி மாதிரி பெரிய பண்டிகைகளுக்கு முன்னாடி தான் மத்திய அரசு ஊழியர்களுக்கான DA உயர்வை அரசாங்கம் அறிவிக்கும். அதனால இந்த முறையும் அக்டோபர்ல அறிவிப்பு வர அதிக வாய்ப்பு இருக்கு. முதலீட்டு கட்டுரை படிக்கலாமே - Gold Investment: 15% சரிவா? அரிய வாய்ப்பா? தங்கத்தில் ஸ்மார்ட்டாக முதலீடு செய்வது எப்படி?
66
முழு 3 மாத அரியர்ஸ் தொகையும் கிடைக்கும் தெரியுமா?
கேபினட் ஒப்புதல் கொடுத்ததும், நிதி அமைச்சகம் ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும். இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை ஊழியர்களின் அக்டோபர் மாச சம்பளத்தோட அரசாங்கம் சேர்க்கலாம். இதுல ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான முழு 3 மாத அரியர்ஸ் தொகையும் (நிலுவைத்தொகை) சேர்ந்து கிடைக்கும். அப்போ ஜாலிதானே மக்களே.!