மாதம் ₹9,000 வரை உதவித்தொகை! மாணவர்களுக்கு லக்! - மத்திய பட்ஜெட்டில் ஒளிந்திருந்த அந்த 'ரகசிய' திட்டம்!

Published : Feb 23, 2026, 09:03 PM IST

CA இனி CA ஆபீஸிலும் பிரதமர் இன்டர்ன்ஷிப்! மாதம் ₹9,000 ஸ்டைபன். CSR விதியில் மாற்றம். 'கார்ப்பரேட் மித்ரா' திட்டம் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

PREV
16
CA

இந்தியாவின் நிதித்துறையில் நுழையத் துடிக்கும் இளைஞர்களுக்கும், வணிக உலகிற்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதுவரை பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே சாத்தியமாக இருந்த 'பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம்' (PM Internship Scheme), இனி உங்கள் ஊரில் உள்ள ஆடிட்டர் அலுவலகங்களிலும் (CA Firms) கிடைக்கப் போகிறது.

26
விதிமுறையில் மாற்றம்: தடையை உடைத்த ICAI

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் சேர வேண்டுமானால், அந்த நிறுவனம் குறிப்பிட்ட அளவு CSR (Corporate Social Responsibility) நிதியைச் செலவிடும் பெரிய நிறுவனமாக இருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. ஆனால், பெரும்பாலான சி.ஏ நிறுவனங்களிடம் (CA Firms) அந்த அளவுக்கு CSR நிதி இருப்பதில்லை. இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் இந்த வாய்ப்பை இழந்தனர்.

இதைக் கருத்தில் கொண்டு, ICAI விடுத்த கோரிக்கையை ஏற்று, சி.ஏ நிறுவனங்கள் இந்தத் திட்டத்தில் இணைய CSR விதிமுறையில் தளர்வு கொண்டு வர மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் (MCA) திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இனி சிறிய நகரங்களில் உள்ள சி.ஏ அலுவலகங்கள் கூட இந்தத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க முடியும்.

36
'கார்ப்பரேட் மித்ரா' (Corporate Mitra) - புதிய புரட்சி!

2026-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 'கார்ப்பரேட் மித்ரா' திட்டத்தின் கீழ், சி.ஏ நிறுவனங்கள் மூலம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

• பயிற்சி காலம்: மொத்தம் 9 மாதங்கள் (45 நாட்கள் வகுப்பறைப் பயிற்சி + 6 முதல் 7 மாதங்கள் நேரடி களப்பயிற்சி).

• யாருக்கு வாய்ப்பு? கல்லூரியில் படித்த பட்டதாரி இளைஞர்கள், குறிப்பாக டயர்-2 மற்றும் டயர்-3 (Tier-2 & Tier-3) நகரங்களைச் சேர்ந்தவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

• வேலை என்ன? சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு (MSMEs) தேவையான ஜிஎஸ்டி, வரித் தாக்கல் மற்றும் கணக்கு வழக்கு compliance பணிகளை இவர்கள் மேற்கொள்வார்கள்.

46
மாதம் ₹9,000 வரை உதவித்தொகை!

இந்தத் திட்டத்தின் மிகப் பெரிய சிறப்பம்சமே உதவித்தொகைதான். பயிற்சி காலத்தில் மாணவர்களுக்கு மாதம் ₹9,000 வரை உதவித்தொகை (Stipend) வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சி முடிந்த பிறகு, தேர்ச்சி பெறும் மாணவர்கள் 'கார்ப்பரேட் மித்ரா' என்ற சான்றிதழைப் பெறுவார்கள். இது அவர்கள் சி.ஏ (CA) படிப்பைத் தொடரவும் ஒரு உந்துதலாக அமையும் என்று ICAI தலைவர் பிரசன்ன குமார் தெரிவித்துள்ளார்.

56
MSME-க்களுக்கு என்ன லாபம் ?

சிறு தொழில்முனைவோர்கள் பெரும்பாலும் ஆடிட்டர்களை அணுக அதிக செலவாகுமோ என்று தயங்குவதுண்டு. ஆனால், இந்த 'கார்ப்பரேட் மித்ராக்கள்' மூலம் குறைந்த செலவில் தங்கள் நிறுவனத்தின் சட்டரீதியான ஆவணங்களைச் சரியாகப் பராமரிக்க முடியும். இது ஒருபுறம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும், மறுபுறம் சிறு தொழில்களுக்கு வளர்ச்சியையும் ஒரே நேரத்தில் வழங்கும் இரட்டை லாபத் திட்டமாகும்.

66
சாதிக்க நினைக்கும் இளைஞர்களே

ஜூன் 2026-க்குள் இத்திட்டம் முழுமையாக அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதித்துறையில் சாதிக்க நினைக்கும் இளைஞர்களே, உங்கள் வாய்ப்பு இதோ உங்கள் வீட்டு வாசலில்!

Read more Photos on
click me!

Recommended Stories