TNPSC Group 2! குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. தேதி குறித்த டிஎன்பிஎஸ்சி.. முழு விவரம் இதோ!

Published : Aug 18, 2025, 06:35 PM IST

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை விரிவாக பார்ப்போம்.

PREV
14
TNPSC Group 2 Exam 2nd Phase Counseling Date Announced

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து வருகிறது. அந்தந்த பதவிகளை பொறுத்து குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல நிலைகளில் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் அரசு வேலையில் சேர்ந்து வருகின்றனர். 

தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி மூலம் அரசு பணியிடங்களின் நியமனம் வெளிப்படையாக நடந்து வருவதால் மாநிலம் முழுவதும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நம்பிக்கையுடன் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.

24
குரூப் 2 பதவிகளுக்கு 2ம் கட்ட கலந்தாய்வு

பெரும்பாலானோர் மற்ற வேலைகளுக்கு கூட செல்லாமல் முழு நேரமாக அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில், குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பதவிகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு வரும் 29ம் தேதி நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி (TNPSC) அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு:-

குரூப் 2 கலந்தாய்வு எங்கு நடக்கிறது?

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் 11 (தொகுதி மற்றும் IIA பணிகள் அறிவிக்கை எண்:2024 நாள் 20.06.2004 மற்றும் அதன் பிற்சேர்க்கைகள்) தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் நேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 மேற்குறிப்பிட்டுள்ள அறிவிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 29.08.2005 நாளன்று தமிழ்நாடு தேர்வாணையம் எண்.3 தேர்வாணையச் சாலை (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) சென்னை 000 003-ல் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறஉள்ளது.

34
கலந்தாய்வு விவரங்களை எப்படி டவுன்லோட் செய்வது?

மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான நாள் நேரம் மற்றும் இதர விவரங்கள் அடங்கிய அழைப்பாணையினை தேர்வர்கள் தேர்வாணைய இணையதளமான (www.tnpsc.gov.in) லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் தேர்வர்களுக்கு அத‌ற்கான விவரம் குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (Email) மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.

44
மறுவாய்ப்பு கிடையாது

மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே அஞ்சல் மூலம் அனுப்பப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு தெரிவு செய்யப்படுவார்கள் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது 

தேர்வர்கள் மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்துகொள்ளத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என‌வும் தெரிவிக்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories