அடிதூள் : 10-ம் வகுப்பு, ஐடிஐ, டிகிரி படித்தவர்களுக்கு பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் வேலை! 656 காலிப்பணியிடங்க:!

Published : Sep 09, 2025, 06:00 AM IST

பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML) நிறுவனத்தில் ஆப்ரேட்டர், செக்யூரிட்டி கார்டு, மேனேஜ்மென்ட் டிரெய்னி உட்பட 656 காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10-ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். முழு விவரங்கள் இங்கே.

PREV
15
மத்திய அரசின் நவரத்னா நிறுவனத்தில் வேலை!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML), நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுரங்கத் துறையில் முக்கியப் பங்காற்றி வருகிறது. அண்மையில், இந்நிறுவனம் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 656 பணியிடங்களை நிரப்ப, தகுதியுள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. 10-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் வரை, பலருக்கும் ஏற்ற வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

25
பல்வேறு பதவிகள்: கல்வித் தகுதி முதல் சம்பளம் வரை

இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில், பல்வேறு பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன. அவற்றில், ஆப்ரேட்டர், மேனேஜ்மென்ட் டிரெய்னி, செக்யூரிட்டி கார்டு, ஃபயர் சர்வீஸ் பணியாளர், ஸ்டாஃப் நர்ஸ் மற்றும் ஃபார்மசிஸ்ட் போன்ற பதவிகளுக்கு, அவற்றின் கல்வித் தகுதி மற்றும் மாத சம்பளம் குறித்த விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. ஆப்ரேட்டர் பதவிக்கு 440 காலியிடங்களும், அதற்கு ஐடிஐ பட்டம் (60% மதிப்பெண்களுடன்) தகுதியாகவும், மாதம் ரூ.16,900 சம்பளமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிக்கு 100 காலியிடங்களும், மெக்கானிக்கல் / எலெக்ட்ரிக்கல் பிரிவில் பி.இ / பி.டெக் பட்டம் தகுதியாகவும், மாதம் ரூ.40,000 - ரூ.1,40,000 சம்பளமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. செக்யூரிட்டி கார்டு மற்றும் ஃபயர் சர்வீஸ் பணியாளர் பதவிகளுக்கு, முறையே 44 மற்றும் 12 காலியிடங்களும், 10-ம் வகுப்பு தேர்ச்சி தகுதியாகவும், மாதம் ரூ.16,900 - ரூ.60,650 சம்பள வரம்பும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாஃப் நர்ஸ் பதவிக்கு 10 காலியிடங்களும், பி.எஸ்சி (நர்சிங்) அல்லது 3 ஆண்டு டிப்ளோமா தகுதியாகவும், மாதம் ரூ.18,780 - ரூ.67,390 சம்பளமாகவும் உள்ளது. இறுதியாக, ஃபார்மசிஸ்ட் பதவிக்கு 4 காலியிடங்களும், 10+2 உடன் 2 ஆண்டு டிப்ளோமா (ஃபார்மசி) தகுதியாகவும், மாதம் ரூ.16,900 - ரூ.60,650 சம்பளமாகவும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

35
வயது வரம்பு மற்றும் விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 29 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். எனினும், குறிப்பிட்ட பிரிவினருக்கு (SC/ST/OBC) அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. விண்ணப்பக் கட்டணம், பணியின் வகையைப் பொறுத்து மாறுபடுகிறது. மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிக்கு ரூ.500ம், பிற பதவிகளுக்கு ரூ.200ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், SC/ST மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்குக் கட்டணம் கிடையாது.

45
தேர்வு செய்யப்படும் முறை

பணிகளைப் பொறுத்து, எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

• விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 20.08.2025

• விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 12.09.2025

55
தகுதியுடையோர்

 அதிகாரப்பூர்வ இணையதளமான www.bemlindia.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன்பு, அறிவிப்பில் உள்ள அனைத்து தகுதிகளையும் முழுமையாகப் படித்து உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.

Read more Photos on
click me!

Recommended Stories