TET: ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

Published : Sep 08, 2025, 05:54 PM ISTUpdated : Sep 08, 2025, 05:57 PM IST

டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை பார்ப்போம்.

PREV
13
டெட் தேர்வு

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதித் தேர்வை (TET) நடத்தி வருகிறது. 2025ம் ஆண்டுக்கான டெட் தேர்வு அறிவிப்பு கடந்த மாதம் வெளியாகி இருந்தது. அதாவது நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் டெட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், விண்ணப்பிக்க இன்று (செப்டம்பர் 8) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அரசு பள்ளி ஆசிரியர்கள் பணியில் தொடர டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்த நிலையில், இன்று கடைசி நாள் என்பதால் ஏராளமான ஆசிரியர்கள் டெட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

23
டெட் தேர்வு கால அவகாசம் நீட்டிப்பு

ஒரே நேரத்தில் ஏராளமான ஆசிரியர்கள் போட்டி போட்டு விண்ணப்பித்ததால் TET தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இணையதள சர்வர் முடங்கியது. இதனால் ஆசிரியர்களால் விண்ணப்பங்களை சமர்பிக்க முடியவில்லை. இதனால் டெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில், டெட் தேர்வுக்கு வரும் 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

33
எப்படி விண்ணப்பிப்பது?

அதாவது 10ம் தேதி வரை டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே ஆசிரியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு செப்டம்பர் 10ம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://trb.tn.gov.in/ வாயிலாக டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories