த்திய ஊழியர்களுக்கு தீபாவளி ஜாக்பாட்! 8வது ஊதிய ஆணையத்தில் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.72,000 வரை கோரிக்கை. NC-JCM ரூ.69,000, BPMS ரூ.72,000 மற்றும் ஃபிட்மென்ட் 4 முன்மொழிவு. அக்டோபர் கூட்டங்கள் முக்கியம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளிக்கு முன் வந்திருக்கும் செய்தி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. 8வது ஊதிய ஆணையம் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தற்போதைய குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.18,000 ஆக இருந்தாலும், சில முக்கிய ஊழியர் சங்கங்கள் அதை ரூ.69,000 முதல் ரூ.72,000 வரை உயர்த்துமாறு வலுவாகக் கோரியுள்ளன. NC-JCM அமைப்பு குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை ரூ.69,000 ஆகவும், ஃபிட்மென்ட் காரணியை 3.833 ஆகவும், ஆண்டு ஊதிய உயர்வை தற்போதைய 3 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகவும் உயர்த்துமாறு கோரியுள்ளது. அதே நேரத்தில் BPMS அமைப்பு இன்னும் ஒரு படி மேலே சென்று குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை ரூ.72,000 ஆகவும், ஃபிட்மென்ட் காரணியை 4 ஆகவும், ஆண்டு உயர்வை 6 சதவீதமாகவும் நிர்ணயிக்குமாறு முன்மொழிந்துள்ளது. இந்தக் கோரிக்கைகள் தற்போதைய பணவீக்கம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் தனிநபர் வருமான உயர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்பட்டுள்ளன. இதையும் படிக்கலாமே - 8th Pay Commission: ஃபிட்மென்ட் ஃபேக்டர், ஓய்வூதியம்… 8வது ஊதியக் குழுவின் லேட்டஸ்ட் அப்டேட்டுகள் – தவறவிடாதீர்கள்!
25
சாதக சிக்னலை தரும் ஃபிட்மென்ட் காரணி
ஃபிட்மென்ட் காரணி என்பது தற்போதைய அடிப்படை ஊதியத்தை புதிய அடிப்படை ஊதியமாக மாற்றும் பெருக்கல் எண்ணாகும். அதாவது புதிய அடிப்படை ஊதியம் = தற்போதைய அடிப்படை ஊதியம் × ஃபிட்மென்ட் காரணி என்ற சூத்திரத்தின் மூலம் கணக்கிடப்படுகிறது. இதன்படி ஃபிட்மென்ட் காரணி 3.833 ஆனால் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் சுமார் ரூ.69,000 ஆகவும், 4 ஆனால் ரூ.72,000 ஆகவும் உயர வாய்ப்புள்ளது. எனினும் இது வெறும் ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகளே தவிர இன்னும் இறுதி முடிவு அல்ல. ஆணையம் இன்னும் தனது பரிந்துரைகளை முழுமையாக தயாரிக்கவில்லை. DA, HRA போன்ற படிகளும் புதிய அடிப்படை ஊதியத்துடன் மீண்டும் கணக்கிடப்படும் என்பதால் மொத்த ஊதிய உயர்வு ஃபிட்மென்ட் காரணியைப் பொறுத்தே அமையும். இதையும் படிக்கலாமே - Farmers Subsidy: விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2.80 லட்சம்.! 50% வரை மானியம்.! யாருக்கு கிடைக்கும்?
35
18 மாத கால அவகாசம்
8வது ஊதிய ஆணையம் 2025 நவம்பர் 3 அன்று அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டது. அதற்கு 18 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் அறிக்கை 2027 நடுப்பகுதியில் சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பு தேதி ஜனவரி 1, 2026 ஆகும். தற்போது ஆணையம் நாடு முழுவதும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறது. வரும் அக்டோபர் 7 மற்றும் 8 தேதிகளில் பெங்களூரிலும், அக்டோபர் 22 மற்றும் 23 தேதிகளில் மும்பையிலும் முக்கியக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இந்தக் கூட்டங்களில் ஊழியர் சங்கங்களும் ஓய்வூதியதாரர் அமைப்புகளும் தங்கள் கருத்துகளை நேரில் முன்வைக்க வாய்ப்பு கிடைக்கும். இதையும் படிக்கலாமே - D-Mart Return & Exchange: டி-மார்ட்டில் வாங்கிய பொருளில் பிரச்சினை இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
இவை தவிர ஆண்டு ஊதிய உயர்வை 6 சதவீதமாக உயர்த்துதல், குடும்ப அளவை 3 பேரிலிருந்து 5 பேராக கணக்கிடுதல், HRA அதிகரிப்பு, ஓய்வூதிய உயர்வு போன்ற பல கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் ஓய்வூதியதாரர்களுக்கும் மாநில அரசு ஊழியர்களுக்கும் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் இப்போது பேசப்படும் அனைத்து எண்களும் முன்மொழிவுகளே. ஆணையத்தின் இறுதி பரிந்துரைகளும் மத்திய அரசின் ஒப்புதலும் கிடைத்த பிறகே உண்மையான ஊதிய உயர்வு தெளிவாகும். இதையும் படிக்கலாமே - Milk paneer: ஒரிஜினல் பன்னீர் vs போலி பன்னீர்.! இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
55
இனி ஜாலியோ ஜிம்கானாதான்
தீபாவளிக்கு முன் வந்திருக்கும் இந்த செய்திகள் மத்திய ஊழியர்களுக்கு பெரிய நம்பிக்கையை அளித்துள்ளன. “இனி ஜாலியோ ஜிம்கானாதான்” என்ற உற்சாகம் அவர்களிடையே பரவியிருந்தாலும், இன்னும் சில மாதங்கள் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் என்பதே உண்மை நிலை. ஆணையத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் அக்டோபர் கூட்டங்களின் முடிவுகளையும் உற்றுநோக்கி வரும் அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இதையும் படிக்கலாமே - SCIENCE: முதலில் வந்தது கோழிதான்.! கொக்கரக்கோ விடுகதைக்கு விடை கிடைச்சாச்சு.!