12வது முடித்தவர்களுக்கு அரசின் வருவாய் துறையில் VAO வேலை ! சம்பளம் ரூ. 81,100 வரை! உடனே விண்ணபிக்க...

Published : May 26, 2025, 08:36 PM IST

வருவாய் துறையில் VAO வேலைவாய்ப்பு 2025. சம்பளம் ரூ. 81,100 வரை. 12வது தேர்ச்சி பெற்றோர் விண்ணப்பிக்கலாம். ஜூன் 14, 2025க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

PREV
15
12வது முடித்தவர்களுக்கு VAO வேலை

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் (VAO) பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12வது படித்தவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. மாதம் ரூ. 25,500 முதல் ரூ. 81,100 வரை சம்பளம் பெறலாம். மொத்தம் 41 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

25
பதவி மற்றும் சம்பள விவரங்கள்

பதவியின் பெயர்: கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer)

சம்பளம்: Rs.25,500 – 81,100/-

காலியிடங்கள்: 41

35
கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு

கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருட டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

வயது தளர்வு: MBC/ OBC/ EBC/ BCM பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் SC பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு.

45
விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வு முறை

விண்ணப்ப கட்டணம்: இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.

தேர்வு செய்யும் முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

55
முக்கிய தேதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.05.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.06.2025

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் [https://recruitment.py.gov.in/] என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை முழுமையாக சரிபார்த்துக் கொள்ளவும்.

Read more Photos on
click me!

Recommended Stories