NMDC லிமிடெட் நிறுவனத்தில் 995 காலியிடங்களுக்கான மத்திய அரசு வேலை அறிவிப்பு! 8 ஆம் வகுப்பு முதல் B.Sc பட்டதாரிகள் வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி ஜூன் 14, 2025.
NMDC நிறுவனத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு!
NMDC லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 995 பணியிடங்களை நிரப்புவதற்கான மத்திய அரசு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கான விண்ணப்ப செயல்முறை மே 25, 2025 அன்று தொடங்கி ஜூன் 14, 2025 அன்று முடிவடைகிறது.
24
பல்வேறு பதவிகளுக்கு அரிய வாய்ப்பு!
இந்த அறிவிப்பில் பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Field Attendant (Trainee) பணிக்கு 151 இடங்கள் காலியாக உள்ளன, இதற்கு 8 ஆம் வகுப்பு அல்லது ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம், சம்பளம் ரூ.18,100 முதல் ரூ.31,850 வரை. Maintenance Assistant (Elect.) (Trainee) பணிக்கு 141 காலியிடங்களும், Maintenance Assistant (Mechanical Dept) (Trainee) பணிக்கு 305 காலியிடங்களும் உள்ளன. Blaster Gr.- II (Trainee) பணிக்கு 6 இடங்களும், Electrician Gr.-III (Trainee) பணிக்கு 41 இடங்களும், Electronics Technician Gr.-III (Trainee) பணிக்கு 6 இடங்களும், HEM Mechanic Gr.- III (Trainee) பணிக்கு 77 இடங்களும், HEM Operator Gr.- III (Trainee) பணிக்கு 228 இடங்களும், MCO Gr.-III (Trainee) பணிக்கு 36 இடங்களும், QCA Gr III (Trainee) பணிக்கு 2 இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. Blaster Gr.- II (Trainee) முதல் QCA Gr III (Trainee) வரையிலான பதவிகளுக்கு மாத சம்பளம் ரூ.19,900 முதல் ரூ.35,040 வரை வழங்கப்படும்.
34
கல்வித் தகுதிகள் மற்றும் வயது வரம்பு!
Maintenance Assistant (Elect.) (Trainee) பதவிக்கு எலக்ட்ரிக்கல் டிரேடில் ITI, Maintenance Assistant (Mechanical Dept) (Trainee) பதவிக்கு வெல்டிங் / ஃபிட்டர் / மெஷினிஸ்ட் / மோட்டார் மெக்கானிக் / டீசல் மெக்கானிக் / ஆட்டோ எலக்ட்ரீஷியன் பிரிவில் ITI படித்திருக்க வேண்டும். Blaster Gr.- II (Trainee) பதவிக்கு 10 ஆம் வகுப்பு/ITI உடன் முதலுதவி மற்றும் சுரங்க மேட்/பிளாஸ்டர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். Electrician Gr.-III (Trainee), Electronics Technician Gr.-III (Trainee), HEM Mechanic Gr.- III (Trainee), HEM Operator Gr.- III (Trainee), MCO Gr.-III (Trainee) ஆகிய பதவிகளுக்கு சம்மந்தப்பட்ட பிரிவுகளில் மூன்று வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். QCA Gr III (Trainee) பதவிக்கு B.Sc (வேதியியல்/நிலவியல்) முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். SC/ ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PwBD பிரிவினருக்கு 10 முதல் 15 ஆண்டுகளும் வயது தளர்வு உண்டு. SC/ ST/ PwBD/ முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை, மற்றவர்கள் ரூ.150 கட்டணம் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யும் முறை OMR அடிப்படையிலான தேர்வு அல்லது கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) மற்றும் உடல் திறன் தேர்வு / வர்த்தக தேர்வு மூலம் நடைபெறும். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.nmdc.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பித்து பயன்பெறுங்கள்!