சேமிப்பு, முதலீடு, கட்டுப்பாடு, மற்றும் சரியான நிதி திட்டமிடல் முக்கியம். சம்பாதித்த பணத்தை சேமித்து, சரியான முதலீடுகள் செய்து, தேவையற்ற செலவுகளைக் குறைத்து, கூடுதல் வருமான வழிகளை உருவாக்கினால், ஒரு வருடத்திலேயே கோடீஸ்வரர் ஆகலாம்.
கோடீஸ்வரன் ஆகணும்னு எல்லாருக்கும் ஆசைதான். ஆனா யாரோ சில பேர் மட்டும்தான் அந்த கனவைக் கையிலே எடுக்கறாங்க. பலர் நினைப்பது "அட பாக்கியம் இருந்தா தான் பணம் வரும்" என்பதுதான். ஆனால் உண்மையை சொன்னா, கோடீஸ்வரன் ஆகுறதுக்கு அதிர்ஷ்டம் மட்டும் போதாது; பழக்கங்கள், கட்டுப்பாடு, மற்றும் சரியான நிதி திட்டமிடல் தான் முக்கியம். ஒரே வருஷத்துக்குள் உங்கள் வாழ்க்கையை மாற்றணும்னா, ஒரு சின்ன பழக்கத்தை கடைப்பிடிக்கணும் – “சேமிப்பு + முதலீடு = செல்வம்.”
27
சேமிக்க கற்றுக்கொள்ளுங்கள்
நம்மில் பெரும்பாலோர் சம்பாதிப்பது சிரமப்பட்டு தான். ஆனா சம்பாதித்த உடனே வாழ்க்கைச் செலவுகள், ஷாப்பிங், பிரம்மாண்ட வாழ்க்கை ஸ்டைல் எல்லாத்துக்கும் செலவழிச்சு விடுறோம். மாத சம்பளம் கையிலே வந்த உடனே “முதலில் உங்களுக்கு உங்களே சம்பளம் கொடுங்க” என்பது முதல் விதி. அதாவது, குறைந்தபட்சம் 20% முதல் 30% வரை, வருமானம் வந்த உடனே பக்கத்துக்கு போட்டு விடணும். அதை யாருக்கும் எடுத்து பயன்படுத்தக்கூடாது.
37
சேமிப்பை மட்டும் விடுங்க – முதலீடு செய்யுங்கள்
வங்கிக்குள் போட்ட சேமிப்புலாம் வட்டி விகிதத்தால் நிறைய கிடைக்காது. அதனால, சேமிப்பு மட்டும் போதாது, முதலீடு தான் உங்களை கோடீஸ்வரன் ஆக்கும். பங்கு சந்தை, மியூச்சுவல் பண்டு, தங்கம், நிலம், அல்லது சைடு பிஸினஸ் என எதுவாக இருந்தாலும், உங்க பணம் உங்களுக்காகவே வேலை செய்ய ஆரம்பிக்கணும். “நீங்க பணத்துக்கு வேலை பண்ணுறதுக்கு பதிலா, பணம் உங்களுக்காகவே வேலை பண்ணணும்” என்பதே வெற்றியின் ரகசியம்.
உதாரணத்துக்கு, மாதம் ₹50,000 சேமித்து முதலீடு பண்ணினீங்கன்னா, ஒரு வருஷத்துல ₹6,00,000 இருக்கும். இதே பணம் 12% வளர்ச்சி அடைந்தா, உங்களோட பணம் சும்மா கிடப்பதில்லை—அதுவே பல மடங்கு வளர்ந்து, கோடீஸ்வர நிலைக்கு தள்ளும். அதோடு சைடு ஹஸில், ஃப்ரீலான்ஸ் வேலை, அல்லது பாசிவ் இன்கம் (வாடகை, ஆன்லைன் வருமானம்) சேர்த்தா, ஒரே வருஷத்துல கோடீஸ்வரன் ஆகுவது சாத்தியம்.
57
தேவையில்லாத செலவுகளை நிறுத்துங்கள்
இன்றைய காலத்தில் பலர் ஆன்லைன் ஷாப்பிங், ஹோட்டல் சாப்பாடு, சப்ஸ்கிரிப்ஷன், தேவையில்லாத எலக்ட்ரானிக் சாதனங்கள் வாங்கி அதிகம் செலவழிக்கிறார்கள். இந்த வீணான செலவுகளை குறைத்தால், நிறைய பணம் உங்களிடம் தங்கி, அதை முதலீடு செய்ய முடியும். இது “சிக்கனம்” அல்ல, “அறிவுடன் செலவழித்தல்.”
67
மனநிலையை மாற்றுங்கள்
கோடீஸ்வரர்களின் சிந்தனை மாறுபட்டது. அவர்கள் நேரத்தை பணத்தைவிட மதிப்பார்கள். புத்தகங்கள் படிப்பார்கள், புதிய விஷயங்களை கற்றுக்கொள்வார்கள், திறமைகளை வளர்த்துக் கொள்வார்கள். ஒரே வருஷம் நீங்க உங்க திறமையை மேம்படுத்தவும், நிதி அறிவை கற்றுக்கொள்ளவும் செலவழிச்சீங்கன்னா, உங்க வருமான வாய்ப்புகள் பல மடங்கு உயரும்.
77
தொடர்ச்சி தான் வெற்றியின் ரகசியம்
பலர் சேமிக்க ஆரம்பிப்பாங்க, ஆனா சில மாதத்துக்குள்ளவே கைவிடுறாங்க. கோடீஸ்வரன் ஆகுறவங்க, கனவு காண்றவர்கள் அல்ல; தொடர்ச்சியாக செயல்பட்றவர்கள்தான். 12 மாதம் ஒரே திட்டத்துல நம்பிக்கையோடு இருந்தா, முடிவு உங்களை அதிர்ச்சி அடைய வைக்கும்.
ஒரே வருஷத்துல கோடீஸ்வரன் ஆகணும்னா:
வருமானத்தில் இருந்து முதலில் சேமியுங்கள்.
சேமிப்பை முதலீடு செய்யுங்கள்.
வீணான செலவுகளை குறையுங்கள்.
கூடுதல் வருமான வழிகளை உருவாக்குங்கள்.
அறிவையும் திறமையையும் வளர்த்துக்கொள்ளுங்கள்.
சீராக, தொடர்ச்சியாக செயல் படுங்கள்.
எளிமையான விஷயங்களை நிரந்தரமாக செய்தால்தான் அதிசயமான முடிவுகள் வரும். இன்று நீங்க ஆரம்பிச்சா, ஒரு வருஷத்துக்குப் பிறகு உங்க வாழ்க்கையே மாறி இருக்கும். அதனால், மந்திர வார்த்தை இதுதான் – “இதை மட்டும் செஞ்சா போதும்! ஒரே வருஷத்துல நீங்க கோடீஸ்வரன்!