மாதச் சம்பளத்தில் மாதம் நடத்துவது கஷ்டம் என்றாலும், திட்டமிட்ட முயற்சிகளும் நிதி ஒழுங்கும் இருந்தால் சாதாரண வருமானம் உள்ளவர்களும் செல்வந்தர்களாகலாம். செலவுகளைக் குறைத்தல், ஒழுக்கமான நிதி மேலாண்மை தெளிவான இலக்குகள், ஆகியவை நிதி வளர்ச்சிக்கு முக்கியம்.
மிடில் கிளாஸ் வாழ்க்கை... ஒரு பக்கத்தில் எதிர்பார்ப்புகள் நிறைந்தது. மறுபுறம் கட்டுப்பாடுகளும். மாத சம்பளத்தில் மாதம் நடத்தவே கஸ்டம். ஆனால், இந்த நிலை நிரந்தரமல்ல. திட்டமிட்ட முயற்சிகளும் நிதி ஒழுங்கும் இருந்தால், சாமான்ய வருமானம் கொண்டவரும் செல்வந்த பட்டியலில் நுழையலாம். அதற்கு என்ன வேண்டும்? வழி தெரிய வேண்டுமே! அந்த வழிகாட்டுதலாகவே இக்கட்டுரை 5 முக்கியக் கோணங்களில் நிதி வளர்ச்சிக்கு அடித்தளம் போடுகிறது.
27
செலவை குறைத்தால் சேமிப்பு
நம் கையில் வரும் சம்பளம் குறைவாக இருக்கலாம். ஆனால், செலவுகள் கட்டுப்பாட்டில் இருந்தால் வளர்ச்சிக்கு தடை இல்லை. நல்ல சம்பளம் இருந்தால் போதும், வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பது ஒரு தவறான எண்ணம். உண்மையில் சம்பளத்தை விட முக்கியமானது செலவுப் பழக்கம். தேவையற்ற உண்ணும் வெளிச்சம், உணவகச் செலவுகள், ஓவர் சப்ஸ்கிரிப்ஷன்கள் ஆகியவற்றைத் தவிர்த்தாலே அதிக சேமிப்பு சாத்தியமாாகிறது. பணத்தின் போக்கை கவனிக்காமை என்பது சேமிப்பின் பெரிய எதிரி.
37
ஒழுங்கில்லாமல் இருந்தால் செல்வம் ஓடிச் செல்லும்!
ஒரு கட்டடத்துக்கு அடித்தளம் எவ்வளவு முக்கியமோ, நிதி வாழ்க்கைக்கு ஒழுங்கும் அவ்வளவு முக்கியம். குடும்ப செலவுகளுக்கான பட்ஜெட் தயாரித்து அதற்குள் தான் பணம் செலவழிக்க வேண்டும். எவ்வளவு சம்பளம் வந்தாலும், கட்டுப்பாடின்றி செலவு செய்தால் பணம் எப்போதும் போதும் என்பதில்லை என்பது உண்மை. தினசரி செலவுகளில் ஒழுங்கு, திட்டமிடல், கட்டுப்பாடு ஆகியவை ஒன்றாக சேர்ந்தால்தான் செல்வத்தை நோக்கி பயணம் சாத்தியமாகிறது.
வாழ்க்கையில் என்ன வேண்டும்? எப்போது வேண்டும்? என்ற தெளிவான இலக்குகள் இல்லாமல் எத்தனை பணம் வந்தாலும் பயன் இல்லை. உங்கள் இலக்குகளை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். வீடு, குழந்தையின் கல்வி, ஓய்வு நிதி, வெளிநாட்டு பயணம் போன்றவை. அவற்றை அடைய வேண்டிய காலக்கெடு, தேவையான தொகை ஆகியவற்றுடன் திட்டமிடுங்கள். இலக்கற்ற முதலீடுகள் வீண். திட்டமிட்ட, ரிஸ்க் புரிந்த முதலீடுகளால் மட்டுமே செல்வம் உருவாகும்.
57
திறமை இல்லாத பணம் – நிலைத்ததல்ல!
திறமை இல்லாமல் சம்பளம் இருந்தால் அது ஒரு கட்டத்தில் நின்றுவிடும். தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே இருக்கும்; நாமும் வளர வேண்டும். எதையும் கற்றுக்கொள்ள தயங்காதீர்கள். ஒரு வேலையில் மட்டுமே அல்ல, பல துறைகளில் தங்களைத் தயார்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் இல்லாமல் அந்த வேலை நடக்காது என்ற நிலையை உங்கள் திறமையால் உருவாக்குங்கள். அப்போது வேலை இழப்பு என்ற சிரமம் உங்களை தொட்டுக் கூட பார்க்காது!
67
நெருக்கடியின் நேரத்தில் நிதி துணை
வாழ்க்கை என்றால் எதிர்பாராத சவால்கள் தவிர்க்க முடியாதவை. கொரோனாவில் பலர் வேலையை இழந்தார்கள். அவசரநிதி இல்லாதவர்கள் கடனில் மூழ்கினர். குறைந்தது 6 மாதங்களுக்கான செலவுகளைச் சமாளிக்கக்கூடிய அளவுக்கு அவசரநிதி வைத்திருக்க வேண்டும். இது வங்கி வைப்பு, லிக்விட் ஃபண்டுகள், நம்பகமான நிதி கருவிகள் மூலமாக இருக்கலாம். இது ஒரு பாதுகாப்பு கவசம் போல செயல்படும்.
77
நீங்களும் ஆகலாம் அம்பானி
மிடில் கிளாஸ் என்பது ஒரு நிலை, அது ஒரு கட்டுப்பாடு அல்ல. அதை கடந்து செல்வந்த வாழ்க்கையை அடைய எல்லோருக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு தேவையானது – சிந்திக்கத் தயாரான மனம், செயல்படுத்தும் சக்தி, சீரான பழக்கங்கள். ஒழுங்கு, இலக்கு, திறமை, திட்டமிடல், பாதுகாப்பு – இவை இணைந்தால்தான் பணக்கார வாழ்க்கையின் கதவு திறக்கப்படும். இன்று ஒரு சிறிய மாற்றத்தை துவங்குங்கள்... நாளை ஒரு பெரிய மாற்றத்தை பாருங்கள்!