ஏடிஎம் (ATM) இயந்திரங்களில் இருந்து பணம் எடுக்க வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் கார்டு தேவையில்லை. மற்றொரு புதிய அம்சம் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களுக்கு பதிலாக சிடிஎம் (CTM) இயந்திரங்கள் மூலம் பணத்தை டெபாசிட் செய்யலாம். வங்கிகள் இந்த வசதிகளைத் தொடங்குவதால், நுகர்வோர் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) தெரிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஏடிஎம்களில் ஃபிசிக்கல் டெபிட் கார்டுகளின் தேவை இல்லாமல் யுபிஐ (UPI) மூலம் பணத்தை டெபாசிட் செய்வதற்கான புதிய அம்சத்தை உருவாக்கியுள்ளது. மும்பையில் நடந்த குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட் 2024 இல் ஆர்பிஐ துணை ஆளுநர் டி. ரபி சங்கர் UPI இன்டர்ஆப்பரபிள் கேஷ் டெபாசிட் (UPI-ICD) சேவையை அறிமுகம் செய்தார்.
இதன் மூலம், வங்கிகள் மற்றும் ஒயிட் லேபிள் ஏடிஎம் ஆபரேட்டர்களால் இயக்கப்படும் ஏடிஎம்களில் UPI மூலம் பணத்தை டெபாசிட் செய்யலாம். பணத்தை எடுக்கலாம்.
"யுபிஐ, விர்ச்சுவல் பேமெண்ட் முகவரிகள் (VPA), IFSC ஆகியவற்றுடன் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி பணத்தை டெபாசிட் செய்யலாம்" என்று இந்திய தேசிய பேமெண்ட் கழகம் (NPCI) தெரிவித்துள்ளது.
இந்த சேவையைப் இப்போது தேர்தெடுத்த ஏடிஎம் மையங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த புதிய வசதியை அனைத்து ஏடிஎம்களிலும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த UPI அடிப்படையிலான வசதி பயனர்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. UPI-ICD அம்சம் பணத்தை எடுக்கவும் டெபாசிட் செய்யவும் உதவுகிறது. தற்போது வங்கிகள் இந்த வசதியை படிப்படியாக தங்கள் ஏடிஎம் நெட்வொர்க்குகளில் சேர்க்க் நடவடிக்கை எடுத்துவருகின்றன.
இந்த புதிய தொழில்நுட்பம் UPI மூலம் ஏடிஎம் கார்டு இல்லாமலே பணத்தை எடுக்க உதவுகிறது. இது வங்கி சேவை வசதியை மேம்படுத்துகிறது. ஏடிஎம் கார்டை சார்ந்து இருப்பதை குறைப்பதே இதன் நோக்கமாக உள்ளது.
ஏடிஎம் கார்டு இல்லாமல் யுபிஐ மூலம் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வசதி ஏற்கனவே உள்ளது. ஆனால், புதிய வசதி மூலம் UPI மூலம் பணம் எடுப்பதை மேலும் எளிமையாக்கியுள்ளது.
மக்கள் பணத்தை டெபாசிட் செய்ய வங்கிக்குச் செல்லவோ, பணம் டெபாசிட் செய்யும் இயந்திரத்தில் நீண்ட வரிசையில் நிற்கவோ தேவையில்லை. வாடிக்கையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் சென்று பணத்தை டெபாசிட் செய்யலாம்.