இந்தச் சுரங்கத்திலிருந்து கணிசமான அளவு தங்கம் பிரித்தெடுக்கப்படுகிறது. இந்தோனேசியாவில் உள்ள இந்த சுரங்கத்தில் சுமார் 20,000 பேர் பணிபுரிகின்றனர். ஏனெனில் சுரங்கம் மிகப்பெரிய அளவில் நடத்தப்படுகிறது. சுரங்கத்தில் விமான நிலையம் மற்றும் துறைமுகம் உள்ளது. மேலும் குடியிருப்பு வளாகங்கள், பள்ளிகள் மற்றும் அதன் ஊழியர்களுக்கான மருத்துவமனைகளும் உள்ளன.
2023ம் ஆண்டில் மட்டும் கிராஸ்பெர்க் சுரங்கம் 52.9 டன் (1.7 மில்லியன் அவுன்ஸ்) தங்கம், 680,000 டன் தாமிரம் மற்றும் 190 டன் வெள்ளியை உற்பத்தி செய்துள்ளது. இந்த சுரங்கத்தின் வரலாறு 1936ம் ஆண்டு டச்சு புவியியலாளர் ஜீன் ஜாக்ஸ் டோசி இங்கு கனிம வைப்புகளைக் கண்டுபிடித்ததிலிருந்து தொடங்குகிறது.
இருப்பினும், 1960 களில் ஃப்ரீபோர்ட்-மெக்மோரான் இப்பகுதியில் சுரங்க உரிமைகளைப் பெற்றபோது பெரிய அளவிலான சுரங்கம் தொடங்கியது. அப்போதிருந்து, கிராஸ்பெர்க் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.