ரூ.318000 கோடி நிறுவனத்தை வழிநடத்தும் உலகின் சக்திவாய்ந்த பெண்! நீதா அம்பானி இல்ல!

First Published | Nov 30, 2024, 8:24 AM IST

ஃபோர்ப்ஸ் வெளியிட்ட உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் 4 இந்தியப் பெண்கள் இடம்பிடித்துள்ளனர். HCLTech தலைவர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா எந்த இடத்தை பிடித்துள்ளார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

World's most powerful woman

உலக அளவில் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டது, இதில் சிறந்த சாதனையாளர்களில் 4 இந்தியப் பெண்களும் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் அரசியல், வணிகம், பொழுதுபோக்கு, பரோபகாரம் மற்றும் கொள்கை போன்ற துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்திய பெண் தலைவர்களை கொண்டாடும் வகையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டது.

அந்த வகையில் உலகளவில் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலில், இந்திய கோடீஸ்வரரும், பரோபகாரருமான ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா 60வது இடத்தைப் பிடித்துள்ளார்.

World's most powerful woman

இந்தியாவில் பொது வர்த்தகம் செய்யப்படும் ஐடி நிறுவனத்திற்கு தலைமை தாங்கிய முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். உலகளாவிய தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் ஆலோசனை நிறுவனமான HCLTech இன் தலைமை பொறூப்பில் ரோஷ்னி இருந்து வருகிறார். 

Latest Videos


World's most powerful woman

2009 ஆம் ஆண்டு முதல் நிறுவனத்தில் இருந்தாலும், அவரின் தந்தை ஷிவ் நாடார் தலைவர் பதவியில் இருந்து வெளியேறிய பின் ரோஷினி தலைவராக பொறுப்பேற்றார். ₹3.18 லட்சம் கோடி சந்தை மூலதனம் கொண்ட HCLTech நிறுவனத்தின் தலைமை பொறுப்புடன் சேர்த்து அதன் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) வாரியக் குழுவின் தலைவராக உள்ளார்.

World's most powerful woman

இந்தியாவின் பணக்கார தொழில்நுட்ப தொழில்முனைவோரான ஷிவ் நாடாரின் சொத்துமதிப்பு சுமார் 3.5 லட்சம் கோடி ஆகும். ஷிவ் நாடாரின் ஒரே மகளான, ரோஷ்னி புதுமை மற்றும் தலைமைத்துவத்தின் பாரம்பரியத்தைப் பெற்றுள்ளார். அவர் அமெரிக்காவின் நார்த்வெஸ்ட் பல்கலைக்கழகத்தில் தகவல்தொடர்புகளில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார், கெல்லாக் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் எம்பிஏ பெற்றார்.

World's most powerful woman

ரோஷ்னி ஷிவ் நாடார் அறக்கட்டளையின் அறங்காவலராகவும் உள்ளார், இது இந்தியாவில் கல்வியை மாற்றியமைப்பதில் கவனம் செலுத்துகிறது. மேலும் பல முதன்மையான நிறுவனங்களை நிறுவுவதில் முக்கிய பங்காற்றியுள்ளது. பெருநிறுவனப் பொறுப்புகளுக்கு அப்பால், வனவிலங்குப் பாதுகாப்பில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர் ரோஷ்னி நாடார்.

World's most powerful woman

2018 இல், இந்தியாவின் பூர்வீக இனங்கள் மற்றும் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்காக தி ஹாபிடேட்ஸ் அறக்கட்டளையை நிறுவினார். அனிமல் பிளானட் மற்றும் டிஸ்கவரிக்கான ஆன் தி பிரிங்க் என்ற தொலைக்காட்சித் தொடரையும் அவர் தயாரிக்கிறார், இது 2019 முதல் இந்தியாவின் மிகவும் அழிந்து வரும் வனவிலங்கு இனங்களை காட்டும் நிகழ்ச்சியாகும்..

World's most powerful woman

வித்யாக்யான் லீடர்ஷிப் அகாடமியின் தலைவராக, நாடார் மல்ஹோத்ரா ஆதரவற்ற இளைஞர்களுக்கான கல்வி, எதிர்காலத் தலைவர்களை உருவாக்கி வருகிறார். அவரது பரோபகார முயற்சிகள் எல்லைகளுக்கு அப்பால் விரிவடைந்து, சமூக மேம்பாடு மற்றும் அதிகாரமளிப்பதற்கான அர்ப்பணிப்பை உள்ளடக்கியது.

ரோஷ்னி நாடாரின் சொத்து மதிப்பு ரூ.84,000 கோடி என்று கூறப்படுகிறது. மேலும் டெல்லியில் ரூ.100 கோடி மதிப்பு கொண்ட ஆடம்பர வீட்டில் வசித்து வருகிறார். 

click me!