ஷாக் கொடுத்த தங்கம்.! உச்சத்தை தொட்ட விலை.! இன்று ஒரு கிராமுக்கே இவ்வளவு உயர்ந்ததா.?

First Published | Nov 29, 2024, 9:37 AM IST

Gold price chennai : தங்கத்தின் விலை சமீபத்தில் உச்சத்தைத் தொட்டு பின்னர் சரிந்தது. மக்கள் நகை வாங்கும் ஆர்வம் அதிகரித்தாலும், பொருளாதார நிபுணர்கள் விலை மீண்டும் உயரும் என எச்சரிக்கின்றனர். எதிர்காலத்தில் தங்கத்தின் விலை பல மடங்கு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Gold price chennai

ஏறி இறங்கும் தங்கம் விலை

தங்கம் விலையானது நாளுக்கு நாள் ஏறி இறங்கி வருகிறது. அந்த வகையில் தங்கத்தின் விலையானது கடந்த மாதம் வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதன் படி ஒரு சவரன் 60ஆயிரம் ரூபாய் என்ற இலக்கை எட்டியது. அடுத்த அடுத்த நாள் திடீரென தங்கத்தின் விலையானது சரிய தொடங்கியது. 10 நாட்களுக்குள் 4120 ரூபாய் குறைந்தது. எனவே இது தான் நல்ல சான்ஸ் என மக்கள் நகைகளை வாங்கி குவிக்க தொடங்கினர். நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
 

GOLD NEWS

தங்கத்தில் முதலீடு

மேலும் தங்கத்தின் விலையானது தற்போது குறைந்திருந்தாலும் எந்த நேரத்திலும் மீண்டும் அதிகரிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர். அதற்கு ஏற்றார்  போல் தங்கத்தின் விலையானது உயர தொடங்கியது. இரண்டு நாட்களில் 2000 ரூபாய் அளவிற்கு தங்கம் உயர்ந்தது. இருந்து போதும் தங்கத்தில் முதலீடு செய்ய மக்கள் அதிகளவு விருப்பப்பட்டனர். மேலும் அத்தியாவசிய தேவைக்கு தங்கம் சிறந்த சேமிப்பு பொருளாக பார்க்கப்பட்டது.
 

Tap to resize

GOLD RATE

அத்தியாவசிய தேவைக்கு தங்கத்தின் உதவி

கல்வி மற்றும் மருத்துவ செலவுகளுக்காக தங்கத்தை உடனடியாக விற்கவோ அடகு வைக்கவோ முடியும். மேலும்  திருமணம் போன்ற விஷேச நாட்களில் தங்கத்தை அணியவும், நண்பர்களுக்கு பரிசளிக்கவும் மக்கள் தங்கத்தை வாங்குகிறார்கள். மற்ற நாட்டின் மக்களை விட இந்திய மக்களே தங்கத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். இந்தநிலையில் வரும் நாட்களில் தங்கத்தின் விலையானது பல மடங்கு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
 

GOLD PRICE

உச்சத்தை தொடப்போகும் தங்கம் விலை

குகும்குமகுகதற்போது இஸ்ரேல் லெபனான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருப்பதால், தங்கத்தின் விலையேற்றத்தில் சிறிது தேக்கநிலை காணப்படுகிறது. ஆனால்  உலகளவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம், மத்திய வங்கிகளின் அதிகரிக்கும் தங்கம் வாங்கும் ஆர்வம் மேலும்  மத்திய வங்கிகள் தங்கள் நாட்டின் பொருளாதார பாதுகாப்புக்காகத் தங்கத்தை அதிகளவில் வாங்கி குவிக்கும் என கணித்துள்ளது. இதன் காரணமாக தங்கம் விலையானது அடுத்த சில ஆண்டுகளில் உச்சத்தை தொடும் என கூறுகின்றனர். 

today gold price

இன்றைய தங்கம் விலை என்ன.?

இந்த நிலையில் நேற்று தங்கம் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 7090 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து  56,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதன் படி கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்து 7160 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து 57ஆயிரத்து 280 ரூபாய்க்கு வி்றபனை செய்யப்படுகிறது. 

Latest Videos

click me!