Gold reserve In India
உலக கோல்டு கவுன்சில் டேட்டா
இந்தியாவில் தங்கம் மிகவும் ஆடம்பரமான பொருளாக உள்ளது. இந்திய மக்கள் தங்க நகை மீது அதிகளவு ஈர்ப்பு கொண்டுள்ளதாலும், தங்கத்தின் மீது முதலீடு செய்து வருவதாலும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திருமண நிகழ்வுகள், விஷேச நாட்களில் தங்கம் விற்பனை மிகவும் அதிகமாக இருந்து வருகிறது.
தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்துக்கு சென்று வருவதால் இப்போதே பலரும் அதிகளவு தங்கத்தை வாங்கிக் குவித்து வருகின்றனர். இன்றைய நிலவரப்படி 1 கிராம் தங்கம் ரூ.7,151க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.57,208 என்ற விலையிலும் விற்பனையாகிறது. இந்நிலையில், உலகவிளவில் அதிக தங்கம் இருப்பு வைத்திருக்கும் நாடுகள், இந்தியாவில் எவ்வளவு தங்கம் இருப்பில் உள்ளது என்பது குறித்து உலக கோல்டு கவுன்சில் டேட்டா வெளியிட்டுள்ளது.
Gold reserve In Tamilnadu
இந்தியாவில் 24,000 டன் தங்கம்
உலக கோல்டு கவுன்சிலின் டேட்டாவின்படி உலக அளவில் அதிகளவு தங்கம் வைத்திருக்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்திய பெண்கள் சுமார் 24,000 டன் தங்கம் வைத்துள்ளனர். உலக வல்லரசு நாடான அமெரிக்கா 8,000 டன் தங்கம் வைத்துள்ளது. ஜெர்மனி 3,300 டன் தங்கம் வைத்துள்ளது. இதேபோல் இத்தாலி 2,450 டன் தங்கமும், பிரான்ஸ் 2,400 டன் தங்கமும், ரஷ்யா 1,900 டன் தங்கமும் வைத்துள்ளன.
குஷியோ குஷி.! சரசரவென குறைந்த தங்கம் விலை.! இன்று ஒரு கிராமுக்கு இவ்வளவு குறைவா.?
Today Gold rate
இந்திய பெண்களிடம் அதிக தங்கம்
இந்த 5 நாடுகளும் மொத்தம் 18,050 டன் தங்கம் இருப்பு வைத்திருக்கும் நிலையில், இந்தியாவில் மட்டும் 24,000 டன் தங்கம் இருப்பு உள்ளது. உலக நாடுகளின் 11% தங்கம் இந்திய பெண்களிடம் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலக கோல்டு கவுன்சிலின் டேட்டாவின்படி இந்தியாவில் இருக்கும் தங்கத்தில் சுமார் 40% தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற தென்னிந்திய மாநில பெண்களிடம் தான் உள்ளது.