Published : Dec 31, 2024, 09:41 AM ISTUpdated : Dec 31, 2024, 09:42 AM IST
தங்கத்தின் விலை கடந்த 24 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது. 2000 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் ரூபாய்க்கு 28 சவரன் தங்கம் வாங்க முடியும் என்றால், இன்று ஒன்றரை சவரன் மட்டுமே வாங்க முடியும். இந்த நிலையில் தங்கத்தின் விலையானது இன்று குறைந்துள்ளது.
தங்கம் ஒரு விலை மதிப்பற்ற உலோகம். பொதுவாக தங்கம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். குறிப்பாக பெண்களுக்கு தங்கத்தின் மீதான ஆர்வம் சற்று அதிகம் இந்தியப் பெண்களுக்கும் தங்க நகைகளுக்கும் இடையே ஆழமான வேரூன்றிய தொடர்பு உள்ளது.
குறிப்பாக விஷேச நாட்கள் மற்றும் இந்திய திருமணங்களில் தங்க நகைகளை அணிவதற்கு பெண்கள் அதிகளவு விரும்புவார்கள். இதன் காரணமாகவே தங்கத்தின் விலை உயர்ந்தாலும் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
25
Gold rate
ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை
தங்கத்தின் விலையானது ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2000ஆம் ஆண்டில் தங்கத்தின் சராசரி விலை 4,400 ரூபாயாக இருந்தது. இது வருடங்கள் செல்ல செல்ல உச்சத்தை நோக்கி பயணிக்க தொடங்கியது. கடந்த 24 வருடங்களில் ஒரு சவரனுக்கு மட்டும் 55ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. எனவே 2000 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் ரூபாய் கையில் இருந்தால் 28 சவரன் அளவிற்கு தங்கத்தை வாங்கியிருக்கலாம். இன்றோ ஒன்றரை சவரன் மட்டுமே தங்கத்தை வாங்கும் நிலை உள்ளது.
35
gold investment
ஒரு லட்சத்தை தொடும் ஒரு சவரன்
அந்த அளவிற்கு தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. மேலும் வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை ஒரு சவரன் மட்டுமே ஒரு லட்சத்தை தொடும் என்பதால் தற்போதே தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்ய மக்கள் விரும்புகிறார்கள். எனவே தற்போது தங்கத்தை வாங்கி வைத்தால் சில வருடங்களில் பல லட்சங்களில் லாபம் கிடைக்கும் என்பதால் போட்டி போட்டு தங்கம் வாங்கி வருகிறார்கள்.
45
gold rate in tamilnadu
ஏறி இறங்கிய தங்கம் விலை
இதனிடைய தங்கத்தின் விலையானது கடந்த வாரம் ஏறி இறங்கிய நிலையில் நேற்று வாரத்தின் முதல் நாள் தங்கத்தின் விலையானது சற்று அதிகரித்தது. அதன் படி ஒரு கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து 7150 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து 57ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
55
gold rate today
இன்றைய தங்கம் விலை என்ன.?
தங்கத்தின் விலையானது இன்று குறைந்துள்ளது. அந்த வகையில் கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 7ஆயிரத்து 110 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 56,880 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.