Published : Nov 02, 2024, 11:14 AM ISTUpdated : Nov 02, 2024, 11:30 AM IST
அவசரத்துக்குப் பணம் தேவைப்படும்போது, வங்கிக்கோ, ஏடிஎம்களுக்கோ செல்ல நேரமில்லாமல் போகலாம். அதற்காகக் கவலைப்படத் தேவையில்லை. இனி ஆதார் ஏடிஎம் மூலம் வீட்டில் அமர்ந்தபடியே பணம் எடுக்கலாம். இதற்காக AePS சேவையை தபால் துறை தொடங்கியுள்ளது.
அவசர காலத்தில் பணம் தேவைப்பட்டால், உடனே வங்கிக்கோ ஏடிஎம் மையத்துக்கோ செல்ல நேரம் இருக்காது. இதற்காகக் கவலைப்பட வேண்டாம். தபால் துறை ஆதார் ஏடிஎம் என்ற புதிய சேவையைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் வீட்டிலிருந்தே பணம் எடுக்கலாம்.
25
Aadhaar ATM
இந்தியன் போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பணம் உடனடியாக தேவைப்பட்டால், வங்கிக்குச் செல்ல உங்களுக்கு நேரம் இல்லை என்றால், கவலைப்படத் தேவையில்லை என்று கூறியுள்ளது. இப்போது நீங்கள் ஆதார் ஏடிஎம் (AePS) சேவையைப் பயன்படுத்தி வீட்டில் அமர்ந்தே பணம் எடுக்கலாம் என்றும் அதற்கு போஸ்ட் மாஸ்டர் உதவுவார் என்றும் கூறுகிறது.
35
Aadhaar Biometric
ஆதார் அடிப்படையிலான கட்டணச் செயல்முறையின் மூலம், ஒருவர் தனது பயோமெட்ரிக் தகவலை பயன்படுத்தி பணத்தை எடுக்கலாம். அல்லது ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து பணம் செலுத்தலாம். வாடிக்கையாளர்கள் ஏடிஎம் அல்லது வங்கிக்குச் செல்லாமல் ஏஇபிஎஸ் வசதியைப் பயன்படுத்தி சிறிய தொகையை எடுக்கலாம். இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும். இந்த சேவையைப் பயன்படுத்த, உங்கள் ஆதார் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
45
AePS withdrawal
AePS முறையைப் பயன்படுத்தி வீட்டிலிருந்து பணத்தை எடுக்கலாம். உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதையும் இதன் மூலம் அறியலாம். இந்தச் சேவையின் மூலம் வங்கிக் கணக்கில் விவரம் குறித்து ஒரு சிறு அறிக்கையையும் பெறலாம். இது தவிர, வேறு வங்கிக்கும் பணத்தை அனுப்பலாம்.
55
What is AePS?
இந்தச் சேவைகளுக்கு நீங்கள் எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் வீட்டுக்கு வந்து செல்லும் சேவைக்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும். ஆதார் ஏடிஎம் பயன்படுத்த, ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். மேலும், பயோமெட்ரிக் அங்கீகாரமும் அவசியம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.