SBI vs HDFC vs ICICI: 3 வருட பிக்ஸட் டெபாசிட் அக்கவுண்ட்டில் அதிக வட்டி தரும் வங்கி எது?

First Published | Nov 2, 2024, 10:40 AM IST

பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும்போது அதிக வருமானம் வங்கியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை போட்டி போட்டு வட்டி விகிதங்களை வழங்குவதால், முதலீட்டாளர்கள் இவற்றில் இருந்து ஒன்றைத் தேர்வு செய்யலாம்.

Fixed Deposit Schemes

பிக்ஸட் டெபாசிட்களில் முதலீடு செய்வது பணத்திற்கு பாதுகாப்பு வழங்கும் நம்பகமான முதலீட்டு வழியாகும். இது தனிநபர்கள் ஒரு குறிப்பபிட்ட காலத்திற்கு ஒரு மொத்தத் தொகையை முதலீடு செய்ய வாய்ப்பு தருகிறது. பொதுவாக ஏழு நாட்கள் முதல் பத்து ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம்.

FD for Rs 3 lakhs

பிக்ஸட் டெபாசிட் எனப்படும் நிலையான வைப்புத்தொகை பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. இது காலப்போக்கில் உங்கள் சேமிப்பை அதிகரிக்க உதவுகிறது. பிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு வழங்கப்படும் வட்டி விகிதங்கள் வங்கி, டெபாசிட் தொகை மற்றும் முதலீட்டுக் காலம் ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடும். முதலீட்டாளர்கள் புத்திசாலித்தனமாக சரியான முதலீட்டைத் தேர்வு செய்வது அவசியம்.

Tap to resize

Fixed Deposit Interest rate and return

பொது மற்றும் மூத்த குடிமக்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கியில் மூன்று ஆண்டுகளுக்கு ரூ. 3,00,000 பிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என விரிவாகப் பார்க்கலாம்.

SBI FD Interest rate and return

ஸ்டேட் வங்கியில் பொது மக்களுக்கு 6.75%, மூத்த குடிமக்களுக்கு 7.25%  வட்டி விகிதம் வழங்குகிறது. பொதுமக்கள் ரூ.3,00,000 மூன்று ஆண்டுகளுக்கு பிக்ஸட் டெபாசிட் முதலீடு செய்தால், ரூ. 3,66,718 முதிர்வுத்தொகை கிடைக்கும். இதுவே மூத்த குடிமக்களுக்கு 3 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வுத் தொகையாக ரூ. 3,72,164 கிடைக்கும்.

HDFC FD Interest rate and return

ஹெச்டிஎஃப்சி வங்கியில் மூன்று ஆண்டுகளுக்கு ரூ.3,00,000 பிக்சட் டெபாசிட் முதலீடு செய்தால், பொது மக்களுக்கு 7.00%, மூத்த குடிமக்களுக்கு 7.50% வட்டி விகிதம் கிடைக்கும். பொதுமக்கள் 3 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வுத் தொகையாக ரூ. 3,69,432 பெறுவார்கள். மூத்த குடிமக்கள் இதே முதலீட்டுக்கு ரூ. 3,74,915 பெறுலாம்.

ICICI FD Interest rate and return

ஐசிஐசிஐ வங்கி பிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் 3 ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் முதலீடு செய்யும்போது 7.00% வட்டி விகிதம் கிடைக்கிறது. மூத்த குடிமக்களுக்கு 7.50% வட்டி தரப்படும். பொதுமக்கள் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 3,69,432 ஈட்டலாம். மூத்த குடிமக்களுக்கு ரூ. 3,74,915 முதிர்வுத் தொகை கிடைக்கும்.

Latest Videos

click me!