கதவு ஓரம் அல்லது 72-வது சீட் விழுவதைத் தவிர்க்க பயணிகள் ஒரு எளிய வழியைப் பின்பற்றலாம்.
சார்ட் தயாரித்த பின் செக் செய்யுங்கள் (Chart Vacancy): ரயில் கிளம்புவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னால் முதல் சார்ட் தயாரிக்கப்படும். அப்போது யாராவது நடுப்பகுதி சீட்டை புக் செய்துவிட்டு கடைசி நேரத்தில் கேன்சல் செய்திருந்தால், அந்த விஐபி சீட்டுகள் காலியாகும். இதை IRCTC ஆப்பின் 'Chart Vacancy' பிரிவில் பார்க்கலாம்.
பாக்ஸை கிளிக் செய்யாமல் கோச் நம்பர் கொடுங்கள்: IRCTC ஆப்பில் புக் செய்யும் போது, 'Book only if confirm berth are allocated' என்ற பாக்ஸை கிளிக் செய்யாமல், 'Preferred Coach' என்ற இடத்தில் குறிப்பிட்ட கோச் எண்ணையும் (உதாரணமாக S5), Berth Preference-ல் 'Upper' என்றும் கொடுத்து புக் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்யும் போது, அந்த குறிப்பிட்ட கோச்சின் நடுப்பகுதியில் (உதாரணமாக 43-வது சீட்) ஏதேனும் கேன்சல் செய்யப்பட்ட சீட்டுகள் இருந்தால், சாப்ட்வேர் உடனடியாக அந்த நல்ல சீட்டை உங்களுக்கு ஒதுக்கிவிடும். இனி ரயில் டிக்கெட் புக் செய்யும் போது இந்த எளிய கணக்கை மனதில் வைத்து புக் செய்தால், பாத்ரூம் ஓரத்து சீட்களில் இருந்து தப்பித்து, நிம்மதியான பயணத்தை மேற்கொள்ளலாம்.