பட்ஜெட் என்றாலே சிவப்பு நிறப் பை அனைவருக்கும் நினைவுக்கு வரும். இந்த பாரம்பரியம் இந்தியாவில் எப்படி தொடங்கியது, சிவப்பு நிறம் எதைக் குறிக்கிறது என்பதை இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
பட்ஜெட் என்ற வார்த்தை கேட்டாலே, பலருக்கும் உடனே கண் முன்னால் வருவது அந்த சிவப்பு நிறப் பை தான். ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தினத்தில், நிதியமைச்சர் கையில் அந்த சிவப்பு பையுடன் நாடாளுமன்றம் நோக்கி நடக்கும் காட்சி, ஒரு சடங்கு போலவே மாறியுள்ளது. ஆனால் இந்த சிவப்பு பை எதற்காக? இது பின்னால் வெறும் பழக்கமா, இல்லை அதற்கு ஒரு ஆழமான வரலாறா என்ற கேள்வி பலருக்கும் எழும்.
24
பட்ஜெட் வரலாறு
இந்த சிவப்பு நிறத்துக்கும், பட்ஜெட்டுக்கும் உள்ள தொடர்பு நேரடியாக இந்தியாவில் தொடங்கியதல்ல. அதன் வேர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்துக்கே செல்கின்றன. அப்போது சிவப்பு நிறம் என்பது அதிகாரம், பொறுப்பு, ஆட்சி ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்பட்டது. முக்கியமான அரசு ஆவணங்கள், அரசின் நிதி விவரங்கள் போன்றவை சிவப்பு நிற உறையில், பெட்டியில் வைத்துச் செல்லப்பட்டன. அந்த வழக்கமே, இந்தியாவிலும் பட்ஜெட் ஆவணங்களுக்கு சிவப்பு நிறத்தை இணைத்தது.
34
இந்திய பட்ஜெட் பாரம்பரியம்
இந்தியாவில் முதல் பட்ஜெட் 1860-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நாடு முழுவதும் பிரிட்டிஷ் ஆட்சியின் கட்டுப்பாட்டில் இருந்ததால், அவர்களின் நிர்வாக மரபுகள் இங்கேயும் பின்பற்றப்பட்டன. அதனால் பட்ஜெட் ஆவணங்களை சிவப்பு நிற பெட்டியில் வைத்து நாடாளுமன்றத்துக்கு எடுத்துச் செல்லும் வழக்கம் தொடங்கியது. காலம் மாறினாலும், அந்த நடைமுறை மட்டும் ஒரு அடையாளமாகத் தொடர்ந்தது.
சிவப்பு நிறம் வெறும் அலங்காரம் அல்ல. அந்த சக்தி, கம்பீரம், மிகப்பெரிய பொறுப்பு ஆகியவற்றைக் குறிக்கும் வண்ணமாக பார்க்கப்படுகிறது. நாட்டின் வருமானம், செலவுகள், எதிர்காலத் திட்டங்கள் அனைத்தையும் தீர்மானிக்கும் முக்கிய ஆவணம் என்பதால், பட்ஜெட்டுக்கு இந்த நிறம் பொருத்தமானதாகக் கருதப்பட்டது. ஆனால் 2019-ம் ஆண்டு ஒரு மாற்றம் வந்தது. சிவப்பு பெட்டிக்கு பதிலாக, சிவப்பு நிற கோப்பில் பட்ஜெட் ஆவணங்கள் கொண்டு வரப்பட்டன. இது காலனித்துவ நினைவுகளை விட்டு விலகி, புதிய அடையாளத்தை உருவாக்கும் முயற்சியாகவே பார்க்கப்பட்டது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.