அப்போ ஐபோன் வாங்கியிருந்தா நஷ்டம்.. வெள்ளி வாங்கியிருந்தா லாபம்! எவ்வளவு தெரியுமா?

Published : Jan 28, 2026, 02:01 PM IST

ஒரு வருடத்திற்கு முன் வாங்கிய பிரீமியம் ஸ்மார்ட்போனின் மதிப்பு வீழ்ச்சியடையும் அதேவேளையில், அதே பணத்தில் வெள்ளியில் முதலீடு செய்திருந்தால் அதன் மதிப்பு மூன்று மடங்காக உயர்ந்திருக்கும்.

PREV
17
ஐபோன் vs வெள்ளி

ஸ்மார்ட்போன் வாங்கலாமா, முதலீடு செய்யலாமா என்ற குழப்பம் பலருக்கும் வரும். ஆனால் சில நேரங்களில் எடுத்த முடிவுகள், காலம் கடந்தபின் பெரிய வித்தியாசத்தை காட்டும். அதற்கு சமீப காலத்தில் பேசப்பட்ட ஒரு உதாரணம் தான் வெள்ளி விலை உயர்வு. “பொன் வாங்கியிருந்தால் இழப்பு... வெள்ளி வாங்கியிருந்தால் லாபம்” என்ற ஒப்பீடு, இப்போது பலரையும் யோசிக்க வைத்துள்ளது.

27
பிரீமியம் ஸ்மார்ட்போனின் விலை

கடந்த ஆண்டு சந்தைக்கு வந்த ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.1.35 லட்சம். அதே நேரத்தில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1.30 லட்சம் அளவில் இருந்தது. அந்த நேரத்தில் போன் வாங்காமல், அதே பணத்தை வைத்து வெள்ளி வாங்கியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்ற கேள்வி இப்போது பலரிடமும் எழுகிறது. ஏனெனில், வெள்ளி விலை கடந்த ஒரு ஆண்டில் அதிரடியாக உயர்ந்துள்ளது.

37
ஒரு கிலோ வெள்ளி

அப்போது ரூ.1.30 லட்சம் இருந்து ஒரு கிலோ வெள்ளி, இன்று ரூ.3.80 லட்சம் வரை சென்றுள்ளது. அதாவது ஒரே ஆண்டில் கிட்டத்தட்ட மூன்று மடங்கு உயர்வு. இதே நேரத்தில் அந்த ஸ்மார்ட்போனை இன்று விற்றால், அதிகபட்சமாக ரூ.70,000 முதல் ரூ.80,000 வரை கூட கிடைக்காமல் போகும் நிலை. இந்த ஒப்பீடு தான் “போன் வேண்டாமே, வெள்ளி வாங்கியிருக்கலாமே” என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.

47
ஸ்மார்ட்போன்

ஆனால் இந்த ஒப்பீட்டை அனைவரும் ஏற்றுக்கொள்வார்களா என்பது வேறு விஷயம். சிலருக்கு ஸ்மார்ட்போன் என்பது வெறும் சாதனம் இல்லை. அந்த வசதி, வேலை, சமூக அந்தஸ்து என பல விஷயங்களை குறிக்கும். பணத்தை மட்டும் பார்த்து வாழ்க்கையை ரசிக்க முடியாது என்பார்கள். அதனால் போன் வாங்குவது தவறு, முதலீடு செய்தால் மட்டுமே சரி என்ற ஒரே முடிவுக்கு வர முடியாது.

57
வெள்ளி விலை உயர்வுக்கு காரணம்

இருப்பினும், வெள்ளி விலை ஏன் இவ்வளவு வேகமாக உயருகிறது என்ற கேள்விக்கான காரணங்கள் உள்ளன. சோலார் பேனல்கள், எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி, மின்சார வாகனங்கள் போன்ற துறைகளில் வெள்ளியின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்தது. அதே நேரத்தில், உலகளாவிய சந்தை நிலையற்ற நிலையில் இருக்கும் போது, ​​மக்கள் தங்கம், வெள்ளி போன்ற மதிப்புள்ள உலோகங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.

67
முதலீட்டாளர்களின் கவனம்

இந்த காரணங்களால், வெள்ளி மீது முதலீட்டாளர்களின் கவனம் அதிகரித்துள்ளது. சிலர் ஏற்கனவே வெள்ளியில் முதலீடு செய்து, குறுகிய காலத்திலேயே நல்ல லாபம் கண்டுள்ளனர். இதனால், “வெள்ளி தான் அடுத்த தங்கம்” என்ற பேச்சு சந்தையில் கேட்கத் தொடங்கியது.

77
வெள்ளி முதலீடு லாபம்

சந்தை வல்லுநர்களின் கணிப்புப்படி, வெள்ளி விலை இன்னும் மேலே செல்ல வாய்ப்பு உள்ளது. விரைவில் ஒரு கிலோ வெள்ளி ரூ.4 லட்சத்தை கடக்கலாம் என்றும், ஆண்டு முடிவில் ரூ.4.5 முதல் ரூ.4.6 லட்சம் வரை செல்லலாம் என்றும் சில மதிப்பீடுகள் கூறுகின்றன. பொன் வாங்கிய மகிழ்ச்சி ஒரு சில ஆண்டுகள் மட்டுமே; ஆனால் சரியான முதலீடு நீண்ட காலத்தில் வாழ்க்கை முடிவடையும் என்பதையே இந்த வெள்ளி-போன் ஒப்பீடு நினைவூட்டுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories