Secret Reason Behind Holes in Train Tickets: ரயில் டிக்கெட்களின் இருபுறமும் சிறிய துளைகள் இருப்பதை பார்த்திருப்போம். இந்த துளைகள் எதற்காக என்று என்றைக்காவது யோசித்து இருக்கிறீர்களா? அது குறித்து இங்கு பார்க்கலாம்.
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் ரயில் பயணச் சீட்டுகள் மொபைல் செயலிகள் மூலம் புக் செய்யப்படுகின்றன. ஆனால் ரயில் நிலையங்களில் கிடைக்கும் காகித பச்சை் சீட்டுகளை கவனித்திருந்தால் அவற்றின் இரு ஓரங்களிலும் சிறிய துளைகள் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதற்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான காரணம் இருக்கிறது. இந்த துளைகள் வெறும் வடிவமைப்பு அல்லது அலங்காரம் கிடையாது. அதன் பின்னால் அந்த காலத்து தொழில்நுட்பத்தின் சீக்ரெட் ஒளிந்திருக்கிறது.
26
டாட் மேட்ரிக்ஸ் அச்சுப்பொறிகள்
இந்திய ரயில்வேயில் தினமும் லட்சக்கணக்கான பயணச்சீட்டுகள் அச்சிடப்படுகின்றன. அப்போதைய காலத்தில் அச்சிடும் பணி என்பது கடினமானதாக இருந்தது. கணினியோ அல்லது நவீன அச்சுப்பொறிகளோ அப்போது அதிகம் பயன்படுத்தப்படவில்லை. எனவே பயணச்சீட்டுகளை அச்சிட சிறப்பு இயந்திரங்கள் உபயோகப்படுத்தப்பட்டன. தொழில்நுட்ப ரீதியாக இந்த துளைகளை ஸ்ப்ராக்கெட் என்று அழைக்கின்றனர். பல ஆண்டுகளாக இந்திய ரயில்வேத்துறையில் டாட் மேட்ரிக்ஸ் அச்சுப்பொறிகள் பயன்படுத்தப்பட்டன. அப்போது பயணச் சீட்டுகள் தனித்தனி பக்கங்களாக அல்லாமல் ஒரு நீண்ட தொடர்ச்சியான காகிதத் தாளில் அச்சிடப்பட்டன.
36
பக்கவாட்டு துளைகளின் முக்கியத்துவம்
அச்சுப்பொறி காகிதத்தை பிடித்து சரியாக முன்னோக்கி நகர்த்துவதற்காக இரு பக்கங்களிலும் சமமான இடைவெளியில் துளைகள் இடப்பட்டன. டாட் மேட்ரிக்ஸ் அச்சுப்பொறி முழுவதும் இயந்திர அமைப்பை கொண்டவை. அவற்றின் உள்ள உள்ளே சிறிய பற்களுடன் சக்கரங்களும் இருந்தன. அந்த சக்கரங்கள் காகிதத்தின் பக்கவாட்டில் இடப்பட்டுள்ள துளைகளில் சரியாக பொருந்தி, காகிதத்தை மேல் நோக்கி இழுத்துச் சென்றன. இந்த சிறிய துளைகள் இல்லை என்றால் காகிதம் அச்சுப்பொறிக்குள் வழுக்கி வளைந்து போகும். இதனால் டிக்கெட்டின் மீது அச்சிடப்படும் தகவல்கள் சரியாக விழாமல் தவறாக பிரிண்ட் ஆகி விடும்.
ஒவ்வொரு டிக்கெட்டும் சரியான முறையில் அச்சிடப்பட்டது
இந்த துளைகள் இருப்பதனால் காகிதம் சீராக நேர்கோட்டில் நகர்ந்து, ஒவ்வொரு டிக்கெட்டும் சரியான முறையில் அச்சிடப்படுகிறது. ரயில் பயண சீட்டுக்களில் ரயில் எண், கட்டண விவரங்கள், தேதி, நேரம், ரயில் நிலையத்தின் பெயர், ஏறுமிடம், இறங்குமிடம் போன்ற முக்கிய தகவல்கள் அச்சிடப்பட்டன. அதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் அது மிகப்பெரிய தவறு உருவாக்கை விடும். எனவே இந்த துளைகள் சக்கரத்தில் சரியாகப் பொருந்தி, ஒவ்வொரு காகிதமும் ஒரே வேகத்தில் சீராக நகர்வதை உறுதி செய்தன. தினமும் லட்சக்கணக்கான ரயில் டிக்கெட் அச்சிடப்பட்டாலும், இந்த முறை மிகவும் நம்பகரமானதாக இருந்தது.
56
நவீன அச்சுப்பொறிகளின் தாக்கம்
காலப்போக்கில் டாட் மேட்ரிக்ஸ் அச்சுப்பொறிகளை மாற்றி விட்டு, நவீன அச்சுப்பொறி மற்றும் டிஜிட்டல் அச்சுப்பொறிகள் வந்துவிட்டன. புதிய அச்சுப்பொருட்களுக்கு காகிதத்தை நகரத்த பற் சக்கர அமைப்பு தேவையில்லை. தொடர்ந்து நகரும் நீண்ட காகிதத்தாள்களின் பயன்பாடும் தற்போது குறைந்து விட்டது. அதன் காரணமாக பயண சீட்டுகளில் பக்கவாட்டில் இருந்த அந்த சிறிய துளைகளும் படிப்படியாக மறைந்து விட்டன. மேலும் மொபைல் மூலம் டிக்கெட் புக் செய்வது, ஆன்லைன் டிக்கெட் புக் செய்வது ஆகியவற்றின் காரணமாக பெரும்பாலானோருக்கு ரயில் டிக்கெட் எப்படி இருக்கும் கூடத் தெரிவதில்லை.
66
அந்தக் காலத்தின் தொழில்நுட்ப அறிவு
டிக்கெட்டுகளின் பக்கவாட்டில் இருந்த துளைகள் வெறும் வடிவமைப்போ அல்லது அலங்காரம் மட்டுமல்ல. அது அந்தக் காலத்தின் தொழில்நுட்ப அறிவை விளக்கும் முக்கிய பகுதியாக இருந்தது என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.