Gold Vault: பனிமலையின் கீழ் 148 டன் தங்கம்... உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ரகசிய பங்கரின் பின்னணி!

Published : Jun 20, 2026, 02:52 PM IST

Secret Gold Bunker: உலகளவில் பொருளாதார நிச்சயமற்ற சூழல் அதிகரித்து வரும் நிலையில், வாரத்திற்கு சுமார் 2 டன் தங்கம் வாங்கும் டெதர் நிறுவனம் ஏன் இவ்வளவு தங்கத்தை குவிக்கிறது? அதன் பின்னணி மற்றும் இந்த முடிவுக்கான காரணங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

PREV
15
தங்கத்தை குவித்தது ஒரு தனியார் நிறுவனம்

சுவிட்சர்லாந்தின் பனிமலைகளுக்கு அடியில் அமைந்துள்ள பாதுகாப்பு பங்கர் ஒன்று உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுவாக இதுபோன்ற இடங்கள் போர் காலங்களில் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும். ஆனால் இந்த பங்கில் ராணுவ ஆயுதங்களோ, ரகசிய ஆவணங்களோ இல்லை. அதற்கு பதிலாக சுமார் 148 டன் தங்கம் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால், இந்த தங்கம் எந்த நாட்டிற்கும் சொந்தமானது அல்ல. உலகின் மிகப்பெரிய கிரிப்டோ நிறுவனங்களில் ஒன்றான டெதர் நிறுவனமே இதன் உரிமையாளர் என அதன் தலைமை நிர்வாக அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

25
வாரத்திற்கு 2 டன் தங்கம்

உலகம் முழுவதும் டிஜிட்டல் நாணயங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், டெதர் நிறுவனம் தொடர்ந்து தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. வாரத்திற்கு சுமார் இரண்டு டன் தங்கம் வாங்கும் அளவுக்கு அந்த முதலீட்டு வேகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய அரசியல் பதற்றம், பொருளாதார நிச்சயமற்ற சூழல் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற காரணங்களால், தங்களது சொத்து மதிப்பை பாதுகாக்க நீண்டகால பாதுகாப்பு முதலீடாக நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்க வாங்குதலுக்கு இணையாக ஒரு தனியார் நிறுவனமும் செயல்படுவது கவனிக்கத்தக்கதாக மாறியுள்ளது.

35
தங்கத்தை நோக்கி மாறும் உலக முதலீடு

தங்கம் என்பது ஆபரணம் மட்டுமல்ல, பொருளாதார நெருக்கடி காலங்களில் பாதுகாப்பு சொந்தமாக கருதப்படுகிறது. அதனால்தான் பல நாடுகளும் தங்களது தங்க இருப்பை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதே பாதையில் டெதர் நிறுவனமும் பயணிப்பதால், உலக தங்க சந்தையில் புதிய மாற்றங்கள் உருவாகும் என நிபுணர்கள் கருதுகின்றனர். வரும் மாதங்களில் மேலும் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தங்கத்தை வாங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது நிறைவேறினால், உலக தங்க சந்தையில் தனியார் நிறுவனங்களின் தாக்கம் மேலும் அதிகரிக்கலாம்.

45
இந்திய முதலீட்டாளர்களுக்கு என்ன அர்த்தம்?

தமிழகத்திலும், இந்தியாவிலும் தங்கம் என்பது உணர்வுகளோடு இணைந்த முதலீடாகக் கருதப்படுகிறது. ஆனால் தற்போது உலகளவில் மத்திய வங்கிகளும், பெரிய நிறுவனங்களும் தங்கத்தை அதிகளவில் வாங்கத் தொடங்கியிருப்பது, தங்கத்தின் மீது நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. உலக சூழலில் மாற்றங்கள் ஏற்படும் தங்க விலையை தொடர்ந்து பாதிக்கக்கூடும் என்பதால், முதலீட்டாளர்கள் நீண்டகால பொருளாதார பார்வையுடன் சந்தையை கவனிப்பது முக்கியம்.

55
தங்கத்தின் பின்னால் ஓடும் உலகம்

ஒரு காலத்தில் நாடுகள் மட்டுமே தங்கத்தை குவித்தன. இன்று உலகின் முன்னணி தனியார் நிறுவனங்களும் அதே பாதையைத் தேர்வு செய்துள்ளன. பாதுகாப்பான சொத்தாக தங்கத்தின் மதிப்பு மீண்டும் உலகளவில் உயர்ந்து வரும் நிலையில், இந்த போக்கு எதிர்கால முதலீட்டு சந்தையின் திசையை மாற்றக்கூடிய முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories