கிரெடிட் கார்டு லிமிட் குறைய காரணம் என்ன? என்ன செய்ய வேண்டும்? முழு விவரம்!

First Published | Dec 12, 2024, 12:20 PM IST

கிரெடிட் கார்டு லிமிட்டை வங்கிகள் குறைக்கும் காரணம் என்ன?  கிரெடிட் கார்டு லிமிட் குறையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

Why do banks reduce credit card limits?

இப்போது கிட்டத்தட்ட அனைவரும் கிரெடிட் கார்டைப் பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொருவருக்கும் தங்கள் கிரெடிட் கார்டின் லிமிட் தெரிந்து இருக்கும். அதை மனதில் வைத்து அவர்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்துகிறார்கள். சில நேரங்களில் வங்கிகள் கிரெடிட் கார்டு வரம்பை குறைக்கின்றன.

இது குறித்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் வாயிலாக உங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும். வங்கி ஏன் திடீரென கிரெடிட் கார்டு வரம்பை குறைக்கிறது என உங்களுத் தெரியுமா? அதைப்பற்றி விரிவாக இந்த பதிவில் காணலாம்.

Low credit card limit reasons

பெரும்பாலும் வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை செலுத்துவதில் பல முறை தாமதம் செய்யும் போது மட்டுமே வங்கிகள் கிரெடிட் கார்டு லிமிட்டை குறைக்கின்றன. கிரெடிட் கார்டை தொடர்ந்து கண்காணித்து வரும் வங்கிகள் நிலுவைத் தொகையைச் செலுத்த உங்களிடம் போதுமான பணம் இல்லை என்று கருதுகிறது. இதனால்  கிரெடிட் கார்டு லிமிட்டை குறைத்து விடுகின்றன.

மேலும் உங்கள் கிரெடிட் ஸ்கோர் சிறப்பாக இருக்கும் போது மட்டுமே வங்கி உங்கள் கிரெடிட் கார்டு வரம்பை பராமரிக்கும். கடன் தொகையை நீங்கள் திரும்பத் திரும்பச் செலுத்தத் தவறினால், மோசமான கிரெடிட் ஸ்கோர் காரணமாக உங்கள் கிரெடிட் கார்டு லிமிட் குறைகிறது. எப்போதும் உங்கள் கிரெடிட் கார்டு வரம்பில் 30% மட்டுமே பயன்படுத்த வேண்டும். உங்கள் கார்டு வரம்பில் 70% அல்லது அதற்கு மேற்பட்டவற்றைப் பயன்படுத்தும்போது வங்கி உஙகள் கிரெடிட் கார்டை அபாயகரமானதாக பார்க்கிறது. 

செயலற்ற வங்கிக் கணக்கை எப்படி ஆக்டிவ் செய்வது? SBI, PNB உள்ளிட்ட வங்கிகளில் என்ன செயல்முறை?

Tap to resize

Hoe to apply credit card

இது தவிர, நீங்கள் ஒரே நேரத்தில் பல கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தத் தொடங்கும்போதும் வங்கிகள் உங்களை அபாயகரமான பயனராகக் பார்க்கத் தொடங்குகிறது. நீங்கள் அதிக கடன்களை சார்ந்து இருப்பதாக வங்கிகள் கருதும்போது கிரெட் கார்டு லிமிட் குறையலாம். உங்கள் கிரெடிட் கார்டின் லிமிட் வங்கியால் குறைக்கப்பட்டால், முதலில் வாடிக்கையாளர் சேவையை அழைத்து, கடனை செலுத்த தவறியதற்கான சரியான காரணத்தை தெரிவிக்க வேண்டும். கிரெடிட் கார்டு வரம்பை அதிகரிக்குமாறு வங்கியிடம் மீண்டும் வலியுறுத்தலாம்.

Credit Card apply rules

இந்தியாவில் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 1.6% ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் இது 1.8% ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு நிறுவனங்கள் பொருள் வாங்கி பின்பு பணம் செலுத்தும் முறையை (பை நவ், பே லேட்டர்) கொண்டு வந்து விட்டதால் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை அதிகரித்து விட்டதாக TransUnion Cbil இன் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்தியாவில் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை கடந்த ஆண்டு மார்ச்சில் ரூ.2 டிரில்லியனாக இருந்தது. இது இந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ.2.6 டிரில்லியன் ஆகவும், ஜூன் மாதம்  ரூ.2.7 டிரில்லியனாகவும் அதிகரித்துள்ளது எனவும் TransUnion Cbil இன் தரவுகள் கூறுகின்றன. 

5 வருட முதலீட்டில் 15 லட்சம் வேண்டுமா? மத்திய அரசின் சூப்பர் ஹிட் திட்டம் இதோ!

Latest Videos

click me!