Published : Dec 12, 2024, 09:40 AM ISTUpdated : Dec 12, 2024, 09:44 AM IST
Gold rate in tamilnadu : தங்கத்தின் விலை எதிர்காலத்தில் ஒரு சவரனுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை உயரக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதனால், தங்கத்தில் முதலீடு செய்வது லாபகரமானதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் அதிகளவில் தங்கம் வாங்கி வருகின்றனர்.
தங்கத்தில் முதலீடு செய்ய மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் தங்கத்தின் விலை அதிகரித்தாலும் குறைந்தாலும் தங்கம் வாங்குவதை மக்கள் எப்போதும் விட்டுவிடுவதில்லை. இதனால் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கு முக்கிய காரணமாக தங்கத்தின் விலையானது வரும் நாட்களில் ஒரு சவரன் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை விற்பனை செய்யப்படும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
24
Gold rate in tamilnadu
போட்டி போட்டு தங்க நகை வாங்கும் மக்கள்
எனவே தற்போதே தங்கத்தை வாங்கி வைத்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்ற அடிப்படையில் தங்கம் அதிகளவு வாங்கப்படுகிறது. மேலும் திருமண நிகழ்வுகள், விஷேச நாட்களில் தங்கத்தை வாங்க இந்திய மக்கள் அதிகளவு விருப்பப்படுவார்கள். தங்கத்தில் முதலீடு செய்வதன் மூலம் எப்போதும் நஷ்டம் ஏற்படாது. லாபம் மட்டுமே கிடைக்கும் என்ற காரணத்தால் கடன் வாங்கியாவது தற்போது உள்ள நிலையில் நகைகளை வாங்கி வருகிறார்கள்.
34
gold investment
தங்கமும் அவரச தேவையும்
மேலும் அவரச தேவைக்கு உதவும் வகையில் தங்கம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாலும் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிகிறது. இதன் காரணமாகவே அமெரிக்காவில் தங்கம் விலை குறைந்தாலும் இந்தியாவில் அது அதிகரிக்கரித்து வருவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
44
gold rate today
இன்றைய தங்கம் விலை என்ன.?
டிசம்பர் மாதம் தொடக்கம் முதல் தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் படி நேற்று கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து 7ஆயிரத்து 285 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து 58ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று தங்கத்தின் விலையில் எந்த வித மாற்றமின்றி நேற்றைய விலையில் இன்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.