D-Mart: டி-மார்ட்டில் மட்டும் எப்படி எல்லா பொருளும் மலிவா கிடைக்குது? 'மலிவு விலை' ரகசியம் இதுதான்!

Published : May 25, 2026, 10:11 PM ISTUpdated : May 25, 2026, 10:34 PM IST

D-Mart: மற்ற சூப்பர் மார்க்கெட்டுகளை விடவும் டி-மார்ட்டில் பொருட்கள் விலை குறைவாக விற்கப்படுகின்றன. இவ்வளவு குறைவான விலையில் டி-மார்ட் எப்படி பொருட்களை விற்கிறது? அதன் பின்னணி என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.

PREV
15
டி மார்ட் விலை குறைவாக விற்பதற்கு என்ன காரணம்?

இந்தியச் சில்லறை வர்த்தக சந்தையில் ரிலையன்ஸ், பிக் பஜார் போன்ற பெரும் நிறுவனங்கள் போட்டியிட்டுக் கொண்டிருந்தபோது, எவ்வித ஆரவாரமும் இன்றி அமைதியாக நுழைந்து, இன்று இந்தியாவின் மிக வெற்றிகரமான சூப்பர் மார்க்கெட் சாம்ராஜ்யமாக உயர்ந்திருக்கிறது ‘டி-மார்ட்’ (D-Mart) மற்றவைகளை விட டி மார்ட் மட்டும் இப்படி குறைவாக விற்பனை செய்வதன் காரணம்? அவர்களுக்கு லாபம் தேவையில்லையா? என்ற சந்தேகம் உங்களுக்கு தோன்றலாம். இது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

25
சொந்த இடம், வாடகை மிச்சம்; உடனடி பேமண்ட்

நிறைய கடைகள் மெயின் ரோடுகளில் பெரிய இடங்களை வாடகைக்கு எடுக்கின்றன. அதனால் வாடகை செலவே அதிகமாக இருக்கும். ஆனால் டி-மார்ட் சொந்தமாக இடம் வாங்குவதால், அந்த செலவு மிச்சமாகி லாபமாக மாறுகிறது.

சூப்பர் மார்க்கெட்கள் பொதுவாக சப்ளையர்களிடம் இருந்து பொருட்களை வாங்கி, ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் கழித்துதான் பணம் கொடுப்பார்கள். ஆனால் டி-மார்ட் 7-10 நாட்களுக்குள் பணத்தைக் கொடுத்துவிடுகிறது. இதனால் சப்ளையர்கள் தள்ளுபடி வழங்குகிறார்கள்.

35
மொத்தமாக கொள்முதல், கமிஷன் இல்லை
டி-மார்ட்டுக்கு இந்தியா முழுவதும் கிளைகள் இருப்பதால், மிக அதிக அளவில் பொருட்களைக் கொள்முதல் செய்கிறது. இதில் இடைத்தரகர்கள் யாரும் இல்லை, கமிஷனும் கிடையாது. அதனால் மிகக் குறைந்த விலைக்கே டி-மார்ட்டுக்கு பொருட்கள் கிடைக்கின்றன.
45
குறைந்த செலவில் இன்டீரியர், விளம்பரம்

டி-மார்ட் கடைகளின் உள் அலங்காரத்திற்கு (Interior Design) அதிகம் செலவு செய்வதில்லை. அதுமட்டுமல்லாமல், கோடிக்கணக்கில் செலவு செய்து விளம்பரங்களும் கொடுப்பதில்லை. குறைந்த விலை, நல்ல தரம் மூலமாகவே வாடிக்கையாளர்கள் பெருகியுள்ளனர்.

மேலும் பருப்பு, தானியங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவற்றை டி-மார்ட் தனது சொந்தப் பெயரிலேயே பேக் செய்து விற்கிறது. வெளி பிராண்டுகளை விட இவற்றில் அவர்களுக்கு உற்பத்திச் செலவு குறைவு என்பதால், வாடிக்கையாளர்களுக்கு இன்னும் மலிவாகத் தந்து, தங்களுக்கு அதிக லாபத்தையும் ஈட்டிக் கொள்கிறார்கள்.

55
வருடம் முழுவதும் தள்ளுபடி

இங்கே ஆடம்பரப் பொருட்கள் இருக்காது. அன்றாடம் பயன்படுத்தும் மளிகைப் பொருட்கள் போன்ற தரமானவையே குறைந்த விலையில் கிடைக்கும். இவை வேகமாக விற்பனையாகிவிடுவதால், லாபமும் அதிகமாகிறது.

மற்ற சூப்பர் மார்க்கெட்டுகள் பண்டிகை நாட்களிலோ அல்லது வார இறுதியிலோ மட்டும்தான் தள்ளுபடி வழங்குவார்கள். ஆனால் டி-மார்ட் வருடத்தில் 365 நாட்களும் தள்ளுபடி வழங்கும் உத்தியைக் கையாள்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் ஆஃபர்களுக்காகக் காத்திராமல் எப்போதும் அங்கே குவிகிறார்கள்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories