10 Rupee Note: நாம் தினமும் பயன்படுத்தும் பழைய 10 ரூபாய் நோட்டின் பின்புறம் 3 விலங்குகள் இருக்கும். அதை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? அந்த விலங்குகளின் படம் ஏன் அதில் இருக்கிறது? அதற்குப் பின்னால் ஒரு முக்கிய காரணம் உள்ளது.
நாம் அன்றாட செலவுகளுக்குப் பயன்படுத்தும் பணத்தில், குறிப்பாக பழைய 10 ரூபாய் நோட்டில், யானை, மான், காண்டாமிருகம் ஆகிய மூன்று விலங்குகளின் படங்கள் இடம்பெற்றிருக்கும். இந்த விலங்குகளை மட்டும் ஏன் தேர்ந்தெடுத்தார்கள் தெரியுமா? பழைய ரூ.10 நோட்டின் பின்புறம் உள்ள இந்த விலங்குகள், இந்தியாவின் வளமான வனவிலங்குச் செல்வத்தைக் குறிக்கின்றன. ஒவ்வொரு விலங்குக்கும் ஒரு தனி அர்த்தம் உண்டு. காண்டாமிருகம், குறிப்பாக அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவால் உலகப் புகழ்பெற்றது.
யானை, இந்தியாவின் தேசிய பாரம்பரிய விலங்கு (National Heritage Animal). இது காடுகளின் சூழலியல் சமநிலையை காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மான், இந்தியாவின் பல காடுகளில் காணப்படும் ஒரு மென்மையான வனவிலங்கின்அடையாளம் ஆகும். இந்த படங்கள் மூலம், இந்தியாவின் பல்லுயிர் பெருக்கத்தை உலகுக்கு உணர்த்துவதே நோக்கம். இது வெறும் டிசைன் மட்டுமல்ல. ரிசர்வ் வங்கி வெளியிடும் ஒவ்வொரு நோட்டின் படத்திற்கும் ஒரு சிறப்பு அர்த்தம் உண்டு. ரூ.20 நோட்டில் பாரம்பரிய சின்னங்கள், ரூ.50 நோட்டில் வரலாற்று இடம் என ஒவ்வொரு நோட்டுக்கும் ஒரு கதை இருக்கிறது.
அதேபோல, பழைய ரூ.10 நோட்டு இந்தியாவின் இயற்கை வளத்தை பிரதிபலித்தது. 2018-ல் வெளியான புதிய மகாத்மா காந்தி வரிசை ரூ.10 நோட்டின் பின்புறம் கோனார்க் சூரிய கோயில் படம் உள்ளது. அதனால், புதிய நோட்டுகளில் இந்த விலங்குகள் இல்லை. ஆனாலும், பழைய நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் இருப்பதால் நாம் அவற்றைப் பார்க்க முடிகிறது. இந்த விலங்குகளின் தேர்வு எதேச்சையானது அல்ல; அவை இந்தியாவின் பல்லுயிர் பெருக்கம் மற்றும் வனவிலங்குப் பாதுகாப்பின் அடையாளங்கள்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.