Published : Mar 28, 2023, 10:25 AM ISTUpdated : Mar 28, 2023, 03:16 PM IST
ஆதார் எண்ணுடன் பான் கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான காலஅவசாகம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30ம் தேதிக்குள் இணைக்க கட்டாயமாக்கப்பட்டுள்ளது..ஒருவேளை இணைக்கத் தவறினால் உங்கள் 10 இலக்க பான் எண் செயலிழக்கப்படும் எனவும் வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
நீண்ட நாள் கால அவகாசத்திற்குப் பிறகு மார்ச் 31ம் தேதிக்குள் ஆதாருடன் பான் கார்டை இணைத்தே ஆக வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்த நீலையில், மீண்டும் மேலும் 30 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆதார் எண்ணுடன் பான் எண்ணை ஜூம் 30ம் தேதிக்குள் இணைக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இணைக்காவிட்டால், பான் கார்டு ரத்து செய்யப்படும் என்று வருமானவரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவ்வாறு ஆதாருடன் இணைக்காதவர்கள், 2023 ஏப்ரல் 1ம் தேதி முதல் தங்கள் பான் கார்டை எந்தவிதமான பணப் பரிவர்த்தனைக்கும் பயன்படுத்த முடியாது. 10 இலக்க பான் (நிரந்தர கணக்கு எண்) செயலிழந்துவிடும்.
24
இன்றே ஆதாருடன் பான்கார்டைஇணையுங்கள். அனைவரும் கட்டாயமாகச் செய்ய வேண்டும், தாமதிக்காதீர்கள்.
வருமானவரிச்சட்டத்தின்படி, விதிவிலக்குப்பட்டியலில் இருப்பவர்களைத் தவிர அனைவரும் ஆதார் எண்ணுடன் பான்கார்டை இணைக்க வேண்டும். 2023, மார்ச் 31ம் தேதி கடைசித் தேதியாகும் இதை செய்யாவிட்டால், பான்கார்டு செயலிழந்துவிடும்”
ஆதார் எண்ணுடன், பான் எண்ணை இணைக்காதவர்கள் வருமானவரி ரிட்டனையும் தாக்கல் செய்ய முடியாது.
34
எஸ்எம்எஸ் மூலம் ஆதாருடன்-பான்கார்டை இணைப்பது எவ்வாறு
1. UIDPAN என டைப் செய்ய வேண்டும்.
2. UIDPAN இடைவெளி- 12 இலக்க ஆதார் எண்(இடைவெளி) 10இலக்க பான் எண்ணை டைப் செய்ய வேண்டும்.
3. ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்
4. குறுஞ்செய்தி அனுப்பியபின், ஆதாருடன் பான் எண் இணைக்கப்பட்டது குறித்த உறுதியான செய்தி கிடைக்கும்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.