கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்துக்கு சென்று வருகிறது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு சவரனுக்கு 44 ஆயிரத்தை தொட்டது.
25
தங்கத்தின் விலை உயர்வு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் தங்கம் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
35
நேற்றைய நிலவரத்தின்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ 44,320 ஆக விற்பனை செய்யப்பட்டது.22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,540 ஆக விற்பனையானது.
இன்றைய (மார்ச் 28) நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 குறைந்து 44,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு கிராம் தங்கம் கிராமுக்கு 30 குறைந்து 5,510க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
55
வெள்ளி விலை பொறுத்தவரை சில்லறை வர்த்தகத்தில் 30 காசுகள் குறைந்து 75.70க்கும், ஒரு கிலோ வெள்ளி 55,700க்கும் விற்பனை செய்யப்படுகிறது.