Vande Bharat: வந்தே பாரத் ரயில் ஒரு கி.மீ. ஓட எவ்வளவு கரண்ட் செலவாகும்? சுவாரஸ்யமான சீக்ரெட்ஸ்!

Published : Sep 21, 2026, 06:34 AM IST

Vande Bharat: வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இந்திய ரயில்வேயின் அதிவேக ரயில்களில் ஒன்று. இந்த ரயிலுக்கு ஒரு கிலோமீட்டர் பயணிக்க எவ்வளவு மின்சாரம் தேவை? அதற்கான செலவு எவ்வளவு? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
14
வந்தே பாரத் ரயில்

இந்தியாவில் சொகுசு ரயில்கள், அதிவேக விரைவு ரயில்கள், விரைவு ரயில்கள், சாதாரண முன்பதிவில்லாத ரயில்கள், மெமு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் தேஜாஸ், சதாப்தி, தூரந்தோ, ராஜ்தானி உள்ளிட்ட பல்வேறு அதிவேக விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் நாட்டிலேயே அதிவேகமாக செல்லும் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மற்ற ரயில்களை விட அதிவேகமாக செல்வதாலும், தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு முன்கூட்டியே செல்ல முடியும் என்பதாலும் வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது.

24
வந்தே பாரத் ரயிலுக்கான கரண்ட் செலவு

வந்தே பாரத் ரயில் ஒரு கிலோமீட்டர் பயணிக்க சராசரியாக 20 யூனிட் கரண்ட் எடுக்கும். ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரயில்வே சுமார் ரூ.6.50 செலுத்துகிறது. இதை கணக்கு போட்டால், ஒரு கிலோமீட்டருக்கு சுமார் ரூ.130 கரண்ட் பில் ஆகும். இது வெறும் மின்சார செலவு மட்டும்தான். ரயில் ஊழியர்கள், பராமரிப்பு, டிராக் மற்றும் ஸ்டேஷன் செலவுகள் இதில் சேராது.

மின்சாரம் கணிசமாக குறையும்

வந்தே பாரத் ரயிலில் உள்ள முக்கியமான தொழில்நுட்பம் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங். சாதாரண ரயில்களில் பிரேக் போடும்போது அதன் இயக்க ஆற்றல் வெப்பமாக மாறி வீணாகும். ஆனால், வந்தே பாரத்தில் உள்ள டிராக்‌ஷன் மோட்டார்கள் பிரேக் போடும்போது அந்த ஆற்றலை மீண்டும் மின்சாரமாக மாற்றும். இந்த கரண்ட் மீண்டும் ரயில்வே மின் கட்டமைப்புக்கே போகும். இதனால் ரயில் பயன்படுத்தும் மொத்த மின்சாரம் கணிசமாக குறையும்.

34
ஒரு கிமீக்கு மின்சார செலவு எவ்வளவு?

அதிக வேகத்தில் போகும் ரயிலில் மிகப்பெரிய அளவில் இயக்க ஆற்றல் (Kinetic energy) இருக்கும். சாதாரண பிரேக் போட்டால் இந்த ஆற்றல் முழுவதும் வெப்பமாக வீணாகிவிடும். ஆனால், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் இந்த ஆற்றலின் ஒரு பகுதியை மீண்டும் கரண்ட்டாக மாற்றுகிறது. இப்படி கிடைக்கும் மின்சாரத்தை ரயில்வே பவர் நெட்வொர்க்கிற்கு மீண்டும் அனுப்பலாம்.

டீசல் ரயிலுக்கு ஒரு கிலோமீட்டர் பயணிக்க சுமார் 3.5 முதல் 4 லிட்டர் டீசல் தேவைப்படும். ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100 என வைத்துக்கொண்டால், ஒரு கிலோமீட்டருக்கு ரூ.350 முதல் ரூ.400 வரை செலவாகும். ஆனால் வந்தே பாரத் ரயிலுக்கு மின்சார செலவு சுமார் ரூ.130 மட்டுமே. இது வெறும் எரிபொருள் செலவுக்கான ஒப்பீடு மட்டுமே. ரயிலின் மாடல், தூரம், பயணிகள் எண்ணிக்கை, வேகம் போன்ற பல விஷயங்களை பொறுத்து உண்மையான செலவு மாறும்.

44
நவீன பிரேக்கிங் தொழில்நுட்பங்கள்

வந்தே பாரத் வெறும் எலக்ட்ரிக் ரயில் மட்டுமல்ல, நவீன எலக்ட்ரிக் டிராக்‌ஷன் மற்றும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது. வேகம் அதிகரிக்கும்போது கரண்ட்டை எடுக்கும் இந்த ரயில், வேகம் குறையும்போது மின்சாரத்தை திருப்பித் தருகிறது. 20 யூனிட் கரண்ட், யூனிட்டுக்கு ரூ.6.50 என்ற கணக்கில் ஒரு கிலோமீட்டருக்கு ரூ.130 செலவாகிறது. ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் மூலம் கரண்ட்டை திரும்பப் பெறுவதால் மொத்த மின்சார செலவு குறைகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories