சிவகங்கை, பிள்ளையார்பட்டியில் உள்ள பஞ்சாப் நேஷனல் உழவர் பயிற்சி மையத்தில், மதிப்புக்கூட்டப்பட்ட உணவுப் பொருட்களுக்கான உரிமம் மற்றும் லேபிள் பெறும் விதிமுறைகள் குறித்த பயிற்சி நடைபெற உள்ளது. இது சிறு தொழில் முனைவோருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள பஞ்சாப் நேஷனல் உழவர் பயிற்சி மையத்தில், டிசம்பர் 16-ம் தேதி விவசாயிகள், சிறு தொழில் முனைவோர் மற்றும் உணவு தயாரிப்பு துறையில் ஈடுபட விரும்புபவர்களுக்கான ஒரு முக்கியமான பயிற்சி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சி, ‘மதிப்புக்கூட்டப்பட்ட உணவு பொருள்களுக்கான உரிமம் மற்றும் லேபிள் பெறும் விதிமுறைகள்’ என்ற தலைப்பில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
24
நிறைய கத்துககலாம், நல்லதை கத்துக்கலாம்
இன்றைய காலகட்டத்தில் விவசாய விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்வதை விட, அவற்றை மதிப்புக்கூட்டப்பட்ட உணவுப் பொருட்களாக மாற்றி சந்தைப்படுத்துவது அதிக லாபத்தைத் தரும் வாய்ப்பாக மாறியுள்ளது. ஊறுகாய், மாவு வகைகள், சிற்றுண்டிகள், சத்து கலந்த உணவுப் பொருட்கள், ரெடி-மிக்ஸ் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்யும் போது, அரசு நிர்ணயித்துள்ள உரிமம் மற்றும் லேபிள் விதிமுறைகளை பின்பற்றுவது கட்டாயமாகும். இதனை தெளிவாக புரிந்து கொள்ள உதவும் விதமாக இந்தப் பயிற்சி அமைக்கப்பட்டுள்ளது.
34
அத்தனை தகவல்களையும் உங்களுக்கு சொல்லி கொடுப்பாங்க
இந்த பயிற்சியில், FSSAI உரிமம் எவ்வாறு பெறுவது, லேபிளில் அவசியம் குறிப்பிட வேண்டிய தகவல்கள், உணவுப் பொருட்களின் தரநிலைகள், சட்ட விதிமுறைகள், வணிக சந்தைப்படுத்தலில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் அவற்றை எவ்வாறு தவிர்ப்பது என்பதுபோன்ற பல பயனுள்ள விஷயங்கள் விளக்கப்பட உள்ளன. மேலும், சிறு தொழில் தொடங்க விரும்புவோர் செய்யக்கூடிய பொதுவான தவறுகள் மற்றும் அவற்றை சரி செய்யும் வழிமுறைகளும் எடுத்துரைக்கப்படும்.
இந்த பயிற்சி, கிராமப்புற இளைஞர்கள், பெண்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகளுக்கு தொழில் தொடங்குவதற்கான தெளிவான வழிகாட்டலாக அமையும். உணவு உற்பத்தித் துறையில் சட்டப்படி, பாதுகாப்பாகவும், லாபகரமாகவும் செயல்பட விரும்புவோர் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.தொடர்புக்கு: 94885 75716